News April 10, 2024

திமுக ஊழல்களை அம்பலப்படுத்துவேன்

image

திமுகவின் 50 ஆண்டுகால ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். வேலூரில் பேசிய அவர், திமுக சார்பில் போட்டியிட குடும்ப பின்னணி, ஊழல், தமிழ் கலாசாரத்திற்கு எதிரான மனநிலை ஆகிய 3 தகுதிகள் தேவை என்றும், திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாத நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவின் குறிக்கோளே பிரித்தாளும் சூழ்ச்சிதான் என அவர் சாடினார்.

Similar News

News December 14, 2025

கிருஷ்ணகிரி: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

நிதிஷ் குமாருக்கு கூடுதல் அதிகாரம்!

image

பிஹாரில் புதிதாக உருவாக்கப்பட்ட 3 துறைகளில் விமான போக்குவரத்து துறையை CM நிதிஷ்குமார் தனது வசமாக்கியுள்ளார். இளைஞர் நலன் & வேலைவாய்ப்பு, உயர் கல்வி மற்றும் விமான போக்குவரத்து ஆகிய 3 துறைகள் உருவாக்க கடந்த 9-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 20 ஆண்டுகளாக தனது வசம் இருந்த உள்துறையை நிதிஷ் இழந்த நிலையில், அவரை கூல் செய்ய விமான போக்குவரத்து துறையை பாஜக விட்டுக்கொடுத்ததா என RJD சாடி வருகிறது.

News December 14, 2025

சற்று நேரத்தில் அறிவிக்கிறார் விஜய்

image

தவெகவில் ஒரு சில தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று(டிச.14) வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில், 70% பட்டியலை அவர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளாராம்.

error: Content is protected !!