news

News March 21, 2024

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் (2)

image

11. திருச்சி – கருப்பையா 12.பெரம்பலூா் – சந்திரமோகன் 13.மயிலாடுதுறை – பாபு 14.தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி 15.நெல்லை – சிம்லா முத்துச்சோழன் 16.குமரி – பசிலியான் நாசரேத் 17.புதுச்சேரி – தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.

News March 21, 2024

இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தது அதிமுக

image

விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு ஏப்ரல் 19ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

18 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடி மோதல்

image

அதிமுக இரண்டாம் கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு & புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக – திமுக 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், விசிக, சிபிஎம் & சிபிஐ ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 2 தொகுதிகளிலும், அதிமுக – காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், முஸ்லீம் லீக், மதிமுக & கொமதேக ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 1தொகுதியிலும் நேரடியாக மோதவுள்ளது.

News March 21, 2024

அதிமுகவில் ஒரேயொரு பெண் வேட்பாளர்!

image

மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் ஒரேயொரு பெண் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக நேற்று வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் வேட்பாளர்கள் பெயர் இடம் பெறவில்லை. இன்று வெளியிடப்பட்ட 2ஆவது பட்டியலில், நெல்லையில் சிம்லா முத்துசோழனுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் ஒப்பிடுகையில் இது 2 எண்ண்ணிக்கை குறைவாகும்.

News March 21, 2024

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

image

1.ஸ்ரீபெரும்புதூா் – பிரேம்குமார் 2.வேலூா் – பசுபதி 3.தருமபுரி – அசோகன் 4.திருவண்ணாமலை – கலியபெருமாள் 5.கள்ளக்குறிச்சி – குமரகுரு 6.திருப்பூா் – அருணாச்சலம் 7.நீலகிரி – யோகேஷ் தமிழ்ச்செல்வன் 8.கோவை – சிங்கை ராமச்சந்திரன் 9.பொள்ளாச்சி – கார்த்திகேயன் 10.சிவகங்கை – சேவியர் தாமஸ் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.

News March 21, 2024

இப்போதே 2026க்கு அச்சாரம் போட்ட கருணாஸ்

image

பிரபல நடிகரான கருணாஸ் 2016இல் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரன் என ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த அவர், தற்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அவர் இணையலாம் என கருதப்படுகிறது.

News March 21, 2024

தேமுதிக உத்தேச வேட்பாளர் பட்டியல்

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. கடலூரில் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, மத்திய சென்னையில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி (அ) மாவட்ட செயலாளர் பிரபாகரன், திருவள்ளூரில் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி, தஞ்சையில் டாக்டர் ராமநாதன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 21, 2024

பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை?

image

மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து தகவல் கசிந்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தருமபுரி, சேலம், கடலூர், ஆரணி, அரக்கோணம், திருப்பெரும்புதூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

News March 21, 2024

திமுகவை குறை கூற அதிமுகவுக்கு தகுதி இல்லை

image

திமுகவை குறை கூறுவதற்கு அதிமுகவுக்கு தகுதி இல்லை என திமுக எம்.பி. கனிமொழி காட்டமாக கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், “மக்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த அத்தனை மசோதாக்களையும் (மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா எதிர்த்த மசோதாக்களை) ஆதரித்து அதிமுகவினர் வாக்களித்தனர். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அதிமுக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை” என்றார்.

News March 21, 2024

BREAKING: திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்

image

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் ஆதரவு வழங்க உள்ளார். துரோக அதிமுகவை வீழ்த்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர், பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அனைவரும் ஒரே குடையின் கீழ் அணியாக திரள வேண்டியுள்ளதாக கூறினார்.

error: Content is protected !!