India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வி அடைவதை பார்க்க தொண்டர்கள் விரும்பவில்லை. அதிமுகவின் இரு பிரிவினருக்கும் தனித்தனி சின்னம் ஒதுக்க வேண்டும். தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு ஆளாகியுள்ள ஆளுநர் ரவிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவி, உடனடியாக பதவி விலக வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். பொன்முடி வழக்கில், நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததையடுத்து, பொன்முடிக்கு இன்று அல்லது நாளை பதவிப்பிரமாணம் செய்துவைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பயன்படுத்தும் காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை முதல் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 9 மணி நேரமாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது காரில் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா
என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அவர் பேசியது சர்ச்சையான நிலையில், திமுக புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சையாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஷோபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை நடவடிக்கையில் இருந்து இடைக்கால நிவாரணம் கேட்ட கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது. மதுபானக் கொள்கை ஊழல் மற்றும் டெல்லி ஜல் வாரிய முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில் தற்போது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என விளக்கமளித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கோரிக்கையையும் நிராகரித்தது.
தோனி- ரோஹித் ஷர்மா இடையேயான சாம்பியன் போர் சமனில் முடிந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில், ரோஹித் (MI), தோனி (CSK) தலைமையிலான அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 6ஆவது முறை யார் கோப்பையை வெல்ல போவது? என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், தற்போது இருவருமே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், போர் சமனில் முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடும் மூன்று தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சை, மயிலாடுதுறை, ஈரோடு தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட உள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் சமூக வாக்குகள் ஈரோடு தொகுதியை தவிர்த்து மற்ற இரண்டு தொகுதிகளிலும் அதிகம் என்பதால் இந்த தொகுதிகளை அக்கட்சி போராடி பெற்றுள்ளது. நாளைக்குள் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 13 ஆண்டுகளாக சென்னையை வழிநடத்தி வந்த தோனி, 5 முறை கோப்பையை வென்றுள்ளார். 235 போட்டிகளில், 142இல் வெற்றி பெற்று 2ஆவது அதிகபட்ச வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை சென்னை பெற்றது. தற்போது கேப்டனாக இல்லாமல் சாதாரண ஒரு வீரராக களமிறங்க உள்ளதால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள ஈஷா அறக்கட்டளைத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “விரைவில் நீங்கள் குணமாக வேண்டும். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை. நீங்கள் இல்லையெனில் சூரியன் உதிக்காது, பூமி நகராது. இந்த தருணம் உயிரற்ற நிலையில் உறைந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.