news

News March 27, 2024

கலீல் ஜிப்ரானின் பொன்மொழிகள்!

image

✍எல்லோராலும் கேட்க முடியும்; ஆனால், உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ✍நீ சூரிய ஒளியை ஏற்றுக்கொண்டால், வெப்பத்தை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ✍நீங்கள் புகழும்போது வெட்கப்படும், இகழும்போது மெளனமாகவும் இருப்பவனே மனிதர்களில் சிறந்தவன். ✍நேற்று என்பது இன்றைய நினைவு; நாளை என்பது இன்றைய கனவு. ✍பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது.

News March 27, 2024

சென்னை ஐ.ஐ.டி – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம்

image

பிரான்ஸ் நாட்டின் ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் & சென்னை ஐ.ஐ.டி. இடையே, ‘புத்தொழில் மேம்பாட்டு மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நாட்டின் விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் புத்தொழில் மேம்பாட்டு மையம் சென்னையில் நிறுவப்பட உள்ளது. இதற்கு பிரான்சின் ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் ரூ.900 கோடி நிதியுதவி அளிக்க உள்ளது.

News March 27, 2024

இன்றுமுதல் OTT இல் ‘லவ்வர்’ படத்தை பார்க்கலாம்

image

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘லவ்வர்’ இன்று முதல் (மார்ச் 27) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் காதல் கதைக்களத்தில் உருவான இந்தப் படம், விமர்சன ரீதியில் மட்டுமில்லாது வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது.

News March 27, 2024

குரோகஸ் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன்?

image

குரோகஸ் சிட்டி ஹால் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய 3 நாடுகள் இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய ரஷ்ய உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ், “தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட இந்தத் தாக்குதலுக்கும் உக்ரைன் உளவுத்துறைக்கும் நேரடி தொடர்புள்ளது” என்றார்.

News March 27, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மார்ச் – 27 | பங்குனி – 14
▶கிழமை: புதன் | ▶திதி: துவிதியை
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10.30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶எமகண்டம்: காலை 07:30 – 09:00 வரை
▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை
▶சூலம்: வடக்கு | ▶பரிகாரம்: பால்
▶ சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

News March 27, 2024

2047 இல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா?

image

2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பதிலளித்துள்ளார். இப்போது அதைப் பற்றி பேசுவது முட்டாள்தனம் எனக் கூறிய அவர், நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்னைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். அத்துடன், படித்தவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு; சிலர் உருவாக்கும் பரபரப்புகளை அனைவரும் நம்புவதுதான் என்றார்.

News March 27, 2024

ஆட்டநாயகன் விருது பெற்ற சிவம் துபே

image

GT அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த CSK அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின்பு பேசிய அவர், “தனிப்பட்ட முறையில் ரச்சின் ரவீந்தரா பவர் பிளே ஓவர்களில் அபாரமாக விளையாடி, வெற்றியை CSK பக்கம் எடுத்து வந்தார். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். எங்கள் கையில் விக்கெட்டுகள் இருந்ததால் தான் வென்றோம்” என்றார்.

News March 27, 2024

கல்லீரலை காக்கும் இளநீர் ஊறல்

image

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த (Detox) இளநீர் ஊறலை பருகலாம் என்று மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கப்போகும் முன் இளநீரை வெட்டி, அதில் நாட்டுச் சர்க்கரை போட்டு மூடிவிடவும். 12 மணி நேரம் கழித்து, அதில் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்து வந்தால் போதும், கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பு & நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

News March 27, 2024

ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சிக்கிறது?

image

ஓபிஎஸ் செய்த தவறுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து பேசிய அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவை காப்பாற்ற அவர் தவறிவிட்டார்”என்றார்.

News March 27, 2024

சீனாவை சார்ந்திருக்கும் இந்தியா

image

இந்தியாவின் வாகன உற்பத்தியில் 7.10% பங்களிப்பை சீனா வழங்குவதாக Global Trade Research Initiative தகவல் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “2022-23 இல் இந்தியாவின் வாகன உதிரிபாக இறக்குமதி ₹1.7 லட்சம் கோடியாக இருந்தது. இதில் 30% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. EV வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, உதிரிபாகங்களுக்காக சீனாவை சார்ந்திருப்பது அதிகரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!