News April 13, 2024
தயவு செய்து அண்ணனுக்கு ஓட்டு போடுங்க…

அண்ணனை (விஜய பிரபாகரன்) வெற்றிபெற வைத்தால் அப்பாவின் (விஜயகாந்த்) ஆத்மா சாந்தியடையும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் போட்டியிடும் தனது அண்ணன் விஜய பிரபாகரனை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ” இந்த தொகுதியில் அப்பாவை வெற்றிபெற வைக்கவில்லை என சிலர் வருத்தப்பட்டனர். அதற்கு பதிலாக என் அண்ணனை வெற்றிபெற செய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்தார்.
Similar News
News November 8, 2025
இதற்கு பதிலாக இதை சாப்பிடலாமே..

குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், சில உணவுகளை கண்டாலே, நமது வாயை கட்டுப்படுத்த முடியாது. அதுபோன்ற உணவுகளை தவிர்க்க எளிய வழிமுறைகள் உள்ளன. மேலே போட்டோக்களில் எதற்கு பதிலாக எதை சாப்பிடலாம் என்று பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதை ட்ரை பண்ணுங்க. உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
விஜய் பிளாஸ்ட் PHOTOS

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ வெளியாகியுள்ளது. இதில், ரசிகர்கள் விஜய்யை ஃபிரேம் பை ஃபிரேமாக ரசித்து, SM-யில் போட்டோஸ் வெளியிட்டு கொண்டாடுகின்றனர். பிளாஸ்ட் போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க. கச்சேரி கேட்டீங்களா? எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.
News November 8, 2025
FLASH: தங்கம் விலை குறைந்தது

தினமும் ₹1,000, ₹2,000 என எகிறிய தங்கம் விலை, இந்த வாரம் மக்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்துள்ளது. இந்த வார வர்த்தகம் இன்று மாலையுடன் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை சற்று குறைந்து 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹90,400-க்கு விற்பனையாகி வருகிறது. இது முந்தைய வார விலையை விட ₹80 குறைவாகும். இதேபோல், ஒரு வாரத்தில் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 குறைந்திருக்கிறது.


