India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் புத்தாண்டையொட்டி, நாளை லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினியின் ‘தலைவர் 171’ படத்திற்கான டைட்டிலாக இருக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் ஏப்.22 வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டில் கூறப்பட்டது. அதனால், இது லோகேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், அதன்பின் மழை படிப்படியாக குறைந்து வெப்பம் அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் நிலவுவதால், ஈரான் வான்வழியை ஏர்-இந்தியா விமானங்கள் தவிர்த்துள்ளன. சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் தளபதிகள் பலியானதற்கு பழிவாங்க இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவித்தது. திருப்பி தாக்குவோம் என இஸ்ரேலும் அறிவித்திருப்பதால், போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஈரான் வான் வழியை ஏர்-இந்தியா விமானங்கள் தவிர்த்து வேறு வழியில் செல்கின்றன.
‘போர்ன்விட்டா’ ஊட்டச்சத்து பானம் கிடையாது என வர்த்தகம் & தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட ஆய்வில், ஊட்டச்சத்து பானங்கள் என்று சொல்லப்படுவதற்கான எந்தவொரு வரையறையும் போர்ன்விட்டா போன்றவற்றில் இல்லை. அதனால் ஊட்டச்சத்து பானம் என்ற வரிசையில் இருந்து போர்ன்விட்டா போன்ற பானங்களை நீக்குமாறு அனைத்து இ-காமெர்ஸ் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் தனக்கு காதல் தோல்வி குறித்து நடிகை வித்யா பாலன் பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நான் கல்லூரியில் படிக்கும் போது, என் முதல் காதலன் என்னை ஏமாற்றி விட்டான். காதலர் தினத்தன்று அவன் என்னிடம் வந்து, என் முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினான். அப்போதே நான் நொறுங்கிவிட்டேன். அதன் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். இப்போது நான் நல்ல நிலையில் உள்ளேன் எனக் கூறினார்.
சவுதியில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் நபரை காக்க ₹35 கோடியை கேரள மக்கள் திரட்டியுள்ளனர். சிறுவனை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த ரஹீமுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ₹33 கோடி அளித்தால் மன்னிப்போம் என சிறுவன் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் அவரை காக்க கேரள மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டினர். இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி என பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்
அரியானாவில் 5, ராஜஸ்தானில் 6 இடங்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பாஜக நடத்திய உட்கட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. அக்னிவீர் திட்டம், விவசாயிகள் போராட்டம், ராஜ்புத்திர மற்றும் ஜாட் சமூகத்தினர் எதிர்ப்பு போன்ற பல காரணங்களால், அரியானாவில் ரோஹ்தக், சோனாபட், சிர்ஸா, ஹிசார், கர்னல், ராஜஸ்தானில் பர்மெர், ஷூரு, நகெளர், டெளசா, டோங்க், கரெளலி ஆகிய தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுமாம்.
2025 ஐபிஎல் தொடரில், ரோஹித் ஷர்மா சென்னை அணியில் சேரலாம் என இங்கி., வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ், தற்போதைக்கு கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். இது தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். எனவே, ரோஹித் ஷர்மா அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சேர்ந்தால் சரியாக இருக்கும் எனக் கூறினார்.
பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் பும்ரா அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான பும்ரா, தனது முதல் விக்கெட்டாக விராட் கோலியை வீழ்த்தினார். 6 வருடங்கள் கழித்து 2019இல் நடந்த ஐபிஎல் போட்டியிலும் கோலியை தனது 100ஆவது விக்கெட்டாக வீழ்த்தினார். சமீபத்தில் (ஏப்ரல் 11) நடந்த ஐபிஎல் போட்டியிலும், விராட் கோலியை பும்ரா தான் வீழ்த்தியுள்ளார்.
டிடிவி கையில் அதிமுக செல்லும் என அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. TTV, OPS, சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவின் ஒற்றை தலைமையாக EPS உருவானதற்கு பாஜக முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற முனைப்புடன் செயல்படும் TTV, OPS உடன் கூட்டணி வைத்துள்ள அண்ணாமலையின் பேச்சு மீண்டும் அதிமுக உடைகிறதா? என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.