News April 13, 2024

லோகேஷ் கனகராஜ் பட டைட்டில் நாளை வெளியீடு?

image

தமிழ் புத்தாண்டையொட்டி, நாளை லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினியின் ‘தலைவர் 171’ படத்திற்கான டைட்டிலாக இருக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் ஏப்.22 வெளியாகும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டில் கூறப்பட்டது. அதனால், இது லோகேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

Similar News

News November 12, 2025

விஜய்யால் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம்

image

தவெக உடன் கூட்டணி அமையாவிட்டால், பல அதிமுக தலைவர்கள் போட்டியிட தயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் வசீகரம் + பெரிய கூட்டணி இல்லாமல், போட்டியிட ரெடியாக இல்லை என மாவட்ட, உள்ளூர் தலைவர்கள் EPS-க்கு தகவல் அனுப்ப தொடங்கியுள்ளார்களாம். தேர்தல் பிரசாரங்களுக்கு தொகையை செலவிடுவதிலும் சுணக்கம் காட்டி வருகிறார்களாம். விஜய்யின் இருப்பு பல தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கருதுகின்றனர்.

News November 12, 2025

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

image

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

News November 12, 2025

நீண்ட ஆயுளுடன் வாழ இதை செய்யுங்க!

image

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், நமது உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நோய்களை தவிர்த்து உடல்நலத்தை பேண சில செயல்முறைகளை வேண்டியது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ வழிவகை செய்தன. அதனை தற்போது நகர்ப்புறங்களிலும் எளிதாக பின்பற்றலாம். அவற்றை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!