India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடே எதிர்பார்த்து காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் களத்தில் உத்தரவாதமாக அமல்படுத்தியுள்ளதாகக் கூறினார். நாட்டின் தூண்களான பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். ஏழைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது உறுதி செய்யப்படும். வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் உத்தரவாதம், 24 காரட் தங்கத்துக்கு சமம் என்று பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டபிறகு பேசிய அவர், இன்றைய இந்திய அரசியலில், மோடியின் உத்தரவாதமானது, 24 காரட் தங்கம் போல மிக தூய்மை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்றார். உலக அரசியல் கட்சிகளில், பாஜக தேர்தல் அறிக்கைதான் சுத்தமான தங்கம் என்றும் அவர் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை 27 பேர் குழு தயாரித்துள்ளது. அந்தக் குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் செயல்பட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மற்றொரு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர். நாட்டு மக்கள் கருத்துகளை கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படும். 2025ஆம் ஆண்டு பழங்குடியின பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.1000 வந்து சேர்ந்துவிடும். சரியான பயனாளிகளுக்கு ரூ.1000 செல்கிறதா என்பதை அறிய, தற்போது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தப்படுகிறது . அதே நேரம் தேர்தல் காரணமாக மேல்முறையீடு செய்த மகளிருக்கு இம்மாதம் ரூ.1000 வழங்கப்படாது. அவர்களுக்கு அடுத்த மாதம் வழங்கப்படும்.
அம்பேத்கர் பிறந்தநாளில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக எப்போதும் சமூக நீதிக்காகப் போராடுவதாக தெரிவித்தார். 4 லட்சம் பேரிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.
IPLஇல் இதுவரை நடந்த போட்டிகள் அடிப்படையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுவேந்திர சாஹல் 11 விக்கெட்டுகளுடன் (6 போட்டி) முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா 10 விக்கெட்டுகளுடன் (5 போட்டி) 2ஆவது இடத்திலும், சென்னை வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 9 விக்கெட்டுகளுடன் (4 போட்டி) 3வது இடத்திலும் உள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் வானதி நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர் ஜூன் 5ஆம் தேதி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இது பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. கோவையில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றி பெற்று, எம்பியாக தேர்வு செய்யப்பட்டால், வானதி தலைவராக இருப்பார் என்பது வெறும் யூகம் மட்டுமே. தற்போதைக்கு இதை நம்ப வேண்டாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஏலத்தில் ₹24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். சிறப்பாக பந்துவீசுவார் என்ற எதிர்பார்ப்பில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 4 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அவர், 4 போட்டிகளிலும் சேர்த்து 154 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.