news

News April 13, 2024

இனி தான் ஓபிஎஸ் விஸ்வரூபம் தெரியும்

image

எம்ஜிஆர்-ஐ கருணாநிதி வெளியேற்றியதை போல் ஓபிஎஸ்-ஐ இபிஎஸ் வெளியேற்றி உள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓபிஎஸ் என்று கூறினார். தேர்தலுக்கு பின் ஓபிஎஸ் விஸ்வரூபம் தெரியும் என்றும் மோடிக்கு எப்படி தேர்தல் வேலை செய்வோமோ அதேபோல் ஓபிஎஸ்-க்கு பாஜக கூட்டணி கட்சியினர் செய்வதாகவும் தெரிவித்தார்.

News April 13, 2024

அருந்ததி நாயரின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

image

தமிழில் சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்த அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி ஒரு மாதம் ஆகியும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். மார்ச் 14ஆம் தேதி விபத்தில் சிக்கிய அவர் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் ₹2 லட்சம் வரை செலவு ஆகுவதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் நிதியுதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 13, 2024

IPL: தீவிர பயிற்சியில் CSK அணி

image

CSK-MI இடையேயான 29ஆவது ஐபிஎல் போட்டி, நாளை இரவு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, இன்று காலை மும்பை வந்தடைந்த சென்னை அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தோல்வியில் இருந்து மீண்டுள்ள மும்பை அணி, சொந்த மண்ணில் சென்னையை வீழ்த்துமா? வெற்றியை தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே சமயம், பலம் கொண்ட சென்னை அணியுடன் மோதவுள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?

News April 13, 2024

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

image

ஜாஃபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாஃபர் சாதிக், அவருக்கு தொடர்புடையவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்.9ல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 13, 2024

இதை செய்தால் சிறுநீரக பாதை தொற்று வரவே வராது

image

சிறுநீரக பாதை தொற்று ஆண், பெண் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். அதை கீழ்காணும் நடைமுறையை பின்பற்றினால் தடுக்கலாம் * பாக்டீரியாக்களை வெளியேற்ற தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் * சிறுநீர் கழிப்பதை தள்ளி போடக்கூடாது *தர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து கொண்ட பழ வகைகளை எடுத்து கொள்ள வேண்டும் * கிரான்பெர்ரி சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதை செய்தால், சிறுநீரக பாதை தொற்று வராது.

News April 13, 2024

படைபலம்: ஈரான் Vs இஸ்ரேல் (1)

image

இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், 2 நாடுகளின் படைபலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் ராணுவத்தில் 6.10 லட்சம் பேர் பணியிலும், 3 லட்சம் பேர் காத்திருப்பிலும் உள்ளனர். இஸ்ரேல் தரைப்படையில் 1.70 லட்சம் பேர் பணியிலும், 4.10 லட்சம் பேர் காத்திருப்பிலும் உள்ளனர். ஈரானிடம் 2,842 டாங்கிகளும், இஸ்ரேலிடம் 1,650 டாங்கிகளும் உள்ளன.

News April 13, 2024

படைபலம்: ஈரான் Vs இஸ்ரேல் (2)

image

ஈரானிடம் 3,555 கவச வாகனங்களும், இஸ்ரேலிடம் 6,135 கவச வாகனங்களும் உள்ளன. ஈரான் கடற்படையிடம் 272 போர் கப்பல்களும், இஸ்ரேலிடம் 74 போர் கப்பல்களும் உள்ளன. ஈரானிடம் 19 நீர்மூழ்கி கப்பல்களும், இஸ்ரேலிடம் 6 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 973 விமானங்களும், இஸ்ரேலிடம் 618 விமானங்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 519 ஹெலிகாப்டர்களும், இஸ்ரேலிடம் 128 ஹெலிகாப்டர்களும் உள்ளன.

News April 13, 2024

படைபலம்: ஈரான் Vs இஸ்ரேல் (3)

image

ஈரான், இஸ்ரேலிடம் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளன. ஈரான் அணுஆயுதத்தை தயாரிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை அந்த நாடு மறுத்து வருகிறது. இஸ்ரேலிடம் அணுஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை அந்த நாடு மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில் 2 நாடுகளுக்கும் இடையே போர் மூண்டு, நட்பு நாடுகளும் அதில் தலையிட்டால்,3ஆம் உலகப் போர் உருவாகி பேரழிவு ஏற்படும். இதனை உலகம் நிச்சயம் தாங்காது.

News April 13, 2024

எங்களுக்கு திருமணம் ஆகவில்லை

image

தனக்கும் நடிகை அஞ்சு குரியனுக்கும் திருமணம் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், நடிகர் தர்ஷன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருவருக்கும் திருமணமானது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், அது புது ஆல்பம் பாடல் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கார்த்திக் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் பாடலுக்கு, ‘எண்டே ஓமனே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

News April 13, 2024

நாளை தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: முதல்வர்

image

நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை, அனைவரும் ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அம்பேத்கரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம். சாதி – சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்குகிறார் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!