News May 1, 2024

மே 7ஆம் தேதி வரை மழை பெய்யக் கூடும்

image

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மே 7 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சிலப் பகுதிகளில் மிதமான மழையும், மே 3- 5 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மே 6, 7இல் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

டெல்லியில் காற்று மாசு உச்சம்: 61 விமானங்கள் ரத்து

image

டெல்லியில் காற்று மாசு மிக தீவிரமாகி வரும் நிலையில், பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 450-க்கு மேல் பதிவானது. இதன் எதிரொலியாக தலைநகரில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டதால், டெல்லி விமானநிலையத்தில் 61 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமான சேவைகளை உறுதிப்படுத்திக்கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.

News December 15, 2025

பல்லியின் வால் எத்தனை முறை மீண்டும் வளரும் தெரியுமா?

image

பல்லிகள் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்தி தான் ‘ஆட்டோடோமி’ செயல்முறை. அதாவது வாலை துண்டித்து கொள்ளும் முறை. அப்படி துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் முழுமையாக வளர்ந்து விடும். இதை ரீஜெனரேஷன் என்கிறது அறிவியல். பல்லிகள் எத்தனை முறை வாலை துண்டித்தாலும், அது வளரும். அதற்கு எண்ணிக்கை வரம்பு இல்லை என்றாலும், பல்லியின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

News December 15, 2025

ராயபுரம் மக்களை விட்டுப்போக மாட்டேன்: ஜெயகுமார்

image

எவ்வளவு அதிக சீட்டுகள் கேட்டாலும், பாஜகவுக்கு எத்தனை சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என்பதை EPS தான் முடிவு செய்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மயிலாப்பூர் தொகுதிக்கு மாறப்போவதாக வரும் தகவல்கள் வதந்தி என கூறிய அவர், ‘வெற்றியோ, தோல்வியோ… எந்த காலத்திலும் ராயபுரம் மக்களை விட்டுப்போக மாட்டேன்’ என்று குறிப்பிட்டார். 25 ஆண்டுகள் வெற்றியை தேடித்தந்தவர்கள் ராயபுரம் மக்கள் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!