India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியானாவில் 5, ராஜஸ்தானில் 6 இடங்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என பாஜக நடத்திய உட்கட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. அக்னிவீர் திட்டம், விவசாயிகள் போராட்டம், ராஜ்புத்திர மற்றும் ஜாட் சமூகத்தினர் எதிர்ப்பு போன்ற பல காரணங்களால், அரியானாவில் ரோஹ்தக், சோனாபட், சிர்ஸா, ஹிசார், கர்னல், ராஜஸ்தானில் பர்மெர், ஷூரு, நகெளர், டெளசா, டோங்க், கரெளலி ஆகிய தொகுதிகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுமாம்.
2025 ஐபிஎல் தொடரில், ரோஹித் ஷர்மா சென்னை அணியில் சேரலாம் என இங்கி., வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ், தற்போதைக்கு கேப்டன் பொறுப்பில் இருக்கிறார். இது தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். எனவே, ரோஹித் ஷர்மா அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் சேர்ந்தால் சரியாக இருக்கும் எனக் கூறினார்.
பெங்களூருவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் பும்ரா அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான பும்ரா, தனது முதல் விக்கெட்டாக விராட் கோலியை வீழ்த்தினார். 6 வருடங்கள் கழித்து 2019இல் நடந்த ஐபிஎல் போட்டியிலும் கோலியை தனது 100ஆவது விக்கெட்டாக வீழ்த்தினார். சமீபத்தில் (ஏப்ரல் 11) நடந்த ஐபிஎல் போட்டியிலும், விராட் கோலியை பும்ரா தான் வீழ்த்தியுள்ளார்.
டிடிவி கையில் அதிமுக செல்லும் என அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. TTV, OPS, சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு அதிமுகவின் ஒற்றை தலைமையாக EPS உருவானதற்கு பாஜக முக்கிய காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற முனைப்புடன் செயல்படும் TTV, OPS உடன் கூட்டணி வைத்துள்ள அண்ணாமலையின் பேச்சு மீண்டும் அதிமுக உடைகிறதா? என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கே வாக்களிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட அவர், இபிஎஸ் தலைமயிலான அதிமுகவும், திமுகவும் வேறு வேறு அல்ல என்று சாடினார். ஜூன் 4க்கு பிறகு அதிமுக டிடிவி தினகரன் வசமாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பதை அறிய இந்தியா மட்டுமல்லாது உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார். மேலும், தமிழகத்தில் பாஜக 25% வாக்குகளை நிச்சயம் பெற்று கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேரு மறைவுக்கு பிறகு பிரதமராகும் வாய்ப்பு 2 முறை கிடைத்தும், சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோருக்கு அந்த வாய்ப்பை அளித்ததால் கிங் மேக்கர் என அழைக்கப்பட்ட கர்ம வீரர் காமராஜர், இதே தினத்தில் தான் (1954 ஏப்.13) தமிழக முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார். பின்னர் 1963 அக். 2 வரை 3 முறை தொடர்ந்து முதல்வராக இருந்தார். காங்கிரசை வலுப்படுத்த முதல்வர் பதவியை அவரே ராஜினாமா செய்தார்.
நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவின் விருப்பத்திற்கு இணங்க, சென்னை கொரட்டூரில் சாய் பாபா கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அண்மையில் இக்கோயிலில் விஜய் தரிசனம் மேற்கொண்ட புகைப்படமும் வெளியானது. இந்நிலையில், விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நேரில் சென்றுள்ளார். அவருடன் விஜய்யின் தாயார் ஷோபாவும் உடன் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பதிவில், 2016ல் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் 9 ஆண்டுகளாகியும் ஏன் கட்டப்படவில்லை? 10 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழகத்தில் ஏன் ஒரு முதன்மை கல்வி நிறுவனத்தை கூட மோடி அரசு அமைக்கவில்லை? சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டினார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையிலும், முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் குமரி, தமிழிசை செளந்தரராஜன் தென் சென்னை, எல்.முருகன் நீலகிரி, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த 5 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரமாக பணியாற்றுகிறது.
Sorry, no posts matched your criteria.