news

News May 5, 2024

குடிக்க நீரில்லை; கோதுமை பீர் தேவையா?

image

வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் கொடுக்கவே வழியில்லாத திமுக அரசு கோதுமை பீர் அறிமுகப்படுத்துகிறது என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மதுபான வருமானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.

News May 5, 2024

நீட் எழுதும் மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை

image

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது மதியம் 12 மணிக்கு தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். தேர்வுக்கு மாணவர்கள், 1. நீட் யுஜி அட்மிட் கார்டு 2. தேர்வு மைய விவரங்கள் 3. பயோடேட்டா 4. உறுதிமொழி படிவம் 5. அஞ்சலட்டை அளவு புகைப்படம் 6. ஆதார் உள்ளிட்ட புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

News May 5, 2024

நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று தொடக்கம்

image

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, இன்று தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று இத்தேர்வு நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 வரை நடைபெறும் இத்தேர்வை தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வர்கள் 12 மணிக்குள் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும்.

News May 5, 2024

ஜெயக்குமார் உடலுக்கு திரளானோர் அஞ்சலி

image

மறைந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் ஜெயக்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

News May 5, 2024

யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

ஜெயக்குமார் மரணம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஒரு குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஜெயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியின் பின்னணியில் இருந்தாலும், தொழிலதிபராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

News May 5, 2024

ஹர்திக் பாண்ட்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

GT அணிக்கு எதிரான 55ஆவது லீக் சுற்றுடன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் MI அணி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வீரேந்தர் சேவாக், “தோல்வி குறித்து பாண்ட்யா போன்ற வீரர்களிடம் என்ன நடந்தது என்று MI அணியின் உரிமையாளர் கேள்வியெழுப்ப வேண்டும். அத்துடன் கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவரிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

News May 5, 2024

அரசு மருத்துவனையில் மேலும் ஒரு அவலம்

image

மேட்டூர் அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் உதவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று அப்பகுதியில் விபத்தில் சிக்கிய இருவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அச்சமயம் மருத்துவமனையில் மின்சாரமும் இல்லை, மருத்துவர்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், செவிலியர்கள் டார்ச் லைட்டில் முதலுதவி அளித்து சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 5, 2024

மும்பையைப் போல மேட்டூரிலும் அவலம்

image

இரு தினங்களுக்கு முன் மும்பை அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்ததால் தாயும் குழந்தையும் உயிரிழந்த சோகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மேட்டூர் அரசு மருத்துவமனையில் அதேபோல டார்ச் லைட் வெளிச்சத்தில் செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மின்சாரம் துண்டான நேரத்தில் ஜெனரேட்டரை இயக்குபவர்கள் மருத்துவமனயில் இல்லாததே இந்நிலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

News May 5, 2024

முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை

image

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. அணையை சர்வதேச குழுவை கொண்டு சோதனை செய்ய வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆய்வு செய்ய புதிய குழு எதுவும் தேவையில்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்தது. அத்துடன், அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிடுமாறும் வலியுறுத்தியது.

News May 5, 2024

சம்பளத்தைக் குறைத்த சிவகார்த்திகேயன்

image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘SK23’ படத்தின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகிறது. பிசினஸ் கணக்குகளைச் சொல்லி, அக்ரிமென்ட்டில் போடப்பட்ட சம்பளத்தைக் குறைக்கும்படி, இருவரிடமும் தயாரிப்புத் தரப்பு கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. நெருக்கடியைப் புரிந்துகொண்ட இருவரும், சம்பளத்தைக் குறைத்ததோடு, செலவினைக் கட்டுப்படுத்த இடைவிடாமல் பணியாற்றி வருகின்றனர்.

error: Content is protected !!