news

News May 5, 2024

பூச்சிக்கொல்லியா? உயிர்க்கொல்லியா?

image

வேளாண் உற்பத்திப் பொருள்களின் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. அவை பூச்சிக்கொல்லியாக மட்டுமல்ல மனித உயிர்க்கொல்லியாகவும் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, பூச்சிகளைக் கொல்லும் அதன் வீரியம் உணவுப் பொருள்களிலும் தங்கி, விஷமாக மாறுகிறது. அத்துடன், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு கேன்சர், மரபணுச்சிதைவு போன்ற பாதிப்புகளை ஏற்படுகிறது.

News May 5, 2024

ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்

image

மறைந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய மருமகன் ஜெபாவுக்கு என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்., யார் யாரிடம் இருந்து பணம் பெற வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இந்த கடிதத்தை ஜெயக்குமார் எழுதியிருக்கிறார்.

News May 5, 2024

ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன

image

மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா என சந்தேகம் நீடித்தது. இந்நிலையில், உடற்கூராய்வு தகவல் மூலம் நடந்தது கொலை என்பது உறுதியாகியுள்ளது.

News May 5, 2024

சாம்பியன் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்

image

சர்வதேச களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இகா ஸ்வியாடெக் வென்றுள்ளார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று நடந்த இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், பெலாரசின் அரினா சபலென்காவுடன் போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதினார். ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 7-5, 4-6, 7-6 என்ற புள்ளிக்கணக்கில் அரினாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

News May 5, 2024

நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆனது?

image

திமுக அரசு வாய்ச்சொல் வீரராக இருக்கிறதே தவிர மக்களுக்காக இல்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். நீட் ரகசியத்தை வெளியிட உதயநிதி முன்வருவாரா? ஒரு கையெழுத்தில் நீட் ரத்து என்ற அந்த ரகசியத்தை எப்போது உடைக்கப் போகிறீர்கள்? எனவும் கேள்வி எழுப்பினார். அத்துடன், மக்களை ஏமாற்றும் செயலை திமுக தொடர்ந்தால் இன்னும் பல உயிர்களை பலி கொடுக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.

News May 5, 2024

மசாலாவில் பூச்சிக்கொல்லி அளவை அதிகரிக்க அனுமதி

image

மூலிகை & மசாலா பொருள்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவின் அதிகபட்ச வரம்பை 10 மடங்குவரை அதிகரித்துக்கொள்ள FSSAI ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்த பொருள்களில் உள்ள எம்.ஆர்.எல்., அளவு, முன்பு கிலோ ஒன்றுக்கு, 0.01 மில்லி கிராமாக இருந்தது. ஆனால் தற்போது, கிலோ ஒன்றுக்கு, 0.1 மில்லி கிராமாக 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News May 5, 2024

தமிழகத்தில் நாளை +2 ரிசல்ட் வெளியாகிறது

image

தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மார்ச் மாதம் நடைபெற்ற இத்தேர்வை 7.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து, அறிவித்தபடி நாளை முடிவுகள் வெளியாகிறது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய தளங்களில் முடிவுகளை அறியலாம்.

News May 5, 2024

+2 தேர்வு முடிவுகள் அப்டேட்களுக்கு Way2News

image

தமிழ்நாட்டில் பன்னிரண்டம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06.05.2024) வெளியாகவுள்ளன. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றோர் எத்தனை பேர், அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களின் பட்டியல், சாதனை படைத்த மாணவர்கள் உள்ளிட்ட தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்ள Way2News செயலியை பார்க்கவும். இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News May 5, 2024

நான் ஒரு தோல்வியுற்ற நடிகன்

image

ஹீரோவாக தான் நடித்த எட்டு படங்களும் தோல்வி அடைந்தபோது, இனி சினிமாவில் நடிக்கவே கூடாதென்று முடிவு எடுத்ததாக இயக்குநர் சுந்தர்.சி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “குஷ்புவுக்கு நான் எப்படி நடித்தாலும் பிடிக்கும். அதனால் அவர் ஒருபோதும் என் படங்களை விமர்சிக்க மாட்டார். என்னுடைய மகள்கள்தான் என் படத்தைப் பார்த்து சரியாக விமர்சனம் செய்வார்கள். நான் ஒரு தோல்வியுற்ற நடிகன்” எனத் தெரிவித்தார்.

News May 5, 2024

குடிக்க நீரில்லை; கோதுமை பீர் தேவையா?

image

வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் கொடுக்கவே வழியில்லாத திமுக அரசு கோதுமை பீர் அறிமுகப்படுத்துகிறது என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், வரலாறு காணாத வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதில் முதல்வர் கவனம் செலுத்தவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மதுபான வருமானத்தில் தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!