News May 5, 2024
ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்

மறைந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய மருமகன் ஜெபாவுக்கு என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும்., யார் யாரிடம் இருந்து பணம் பெற வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இந்த கடிதத்தை ஜெயக்குமார் எழுதியிருக்கிறார்.
Similar News
News November 12, 2025
உசைன் போல்ட் பொன்மொழிகள்

*பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *நீங்கள் பந்தயத்தைப் பற்றி அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேன்.
News November 12, 2025
பிஹாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் பாஜக

பிஹாரில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என NDTV-ன் கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. பாஜக 69, நிதிஷ்குமாரின் JD(U) 62, தேஜஸ்வி யாதவ்வின் RJD 63 இடங்களில் வெற்றி பெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் NDA கூட்டணியின் மூத்த அண்ணனாக பாஜக உருவாக உள்ளது. கடந்த தேர்தலில் 75 தொகுதிகளில் வென்று RJD தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
டெல்லியில் முழுமையான குண்டு வெடிக்கவில்லை

டெல்லி கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் அல்ல என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருள் சிக்கியதால், தன்னிடம் உள்ள வெடிபொருளும் சிக்கிவிடுமோ என்ற அச்சத்தில், குண்டு ஆரம்ப நிலையில் இருந்த போதே, உமர் அதை வெடிக்க வைத்துள்ளார். முழுமை பெற்ற குண்டு வெடித்திருந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


