India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் பாஸ்போர்ட் பெற முடியாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வன்கொடுமை தடைச்சட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன் பாஸ்போர்ட் கோரி வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால், அது குற்ற வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால் பாஸ்போர்ட் பெற அனுமதி தர முடியாது என தெரிவித்துள்ளது.
அஜித் நடித்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் 20ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. வணிக ரீதியாக ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. இதற்கிடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக, அஜித் ஹைதராபாத் சென்றார். பணப் பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்ததால், விடாமுயற்சி படப்பிடிப்பை அஜர்பைஜானில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
RCB-CSK இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே RCB அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். கடந்த தொடர்களில் மே 18ஆம் தேதி நடந்த 4 ஐபில் போட்டிகளில், RCB அணி தோற்றதே கிடையாது. ப்ளே-ஆஃப்புக்கு முன்னேற, சென்னை அணியின் இலக்கை 18 ஓவர்களில் அடைய வேண்டும் அல்லது 10 பந்துகளுக்குள்ளேயே சென்னை அணியை வீழ்த்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இன்று குமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலையில் இருந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கனமழை வெளுத்து வாங்கப்போகிறது.
மகப்பேறு நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி அடைந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்த பின்னரும் நிதியுதவி வழங்கப்படாததால், இத்திட்டம் கொண்டு வந்த நோக்கமே சிதைந்து விடுகிறது. மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்கவும், இனி பதிவு செய்யும் கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் நிதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நஜ்முல் ஹொசைன் (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், தன்சித் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி, தன்வீர் இஸ்லாம், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாப் ஹொசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தன்சிம் சாகிப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
விண்ணப்பித்த 3 நாள்களில் இனி பி.எஃப்., அட்வான்ஸ் பெறும் வகையில், தானியங்கி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020இல் கொரோனா பாதிப்பின் போது தானியங்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே பி.எஃப் தொகையை பெற முடியும். இந்நிலையில், தற்போது கல்வி, திருமணம், வீடு கட்டுதல் போன்ற காரணங்களுக்காக பி.எஃப்., தொகையில் அட்வான்ஸ் பெறுவதும் தானியங்கி முறையாக மாற்றப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை பயிற்சிக்காக இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புவதால், ஐபிஎல் அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ஃபில் சால்ட், மொயின் அலி உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் தொடரில் இருந்து விலகுவதால், CSK, RR, KKR, SRH போன்ற அணிகள் எஞ்சியுள்ள போட்டிகளில் தடுமாற வாய்ப்புள்ளது. எந்த இங்கி., வீரரால் பெரும் பின்னடைவு ஏற்படும்?
நடிகை நயன்தாரா, பெங்களூருவில் பிறந்தவர் என்றாலும், கேரள மாநிலம் திருவில்லாவை பூர்விகமாக கொண்டவர். டயானா மரியம் குரியன் என்ற பெயரில் கிறிஸ்தவராகவே வளர்ந்த அவர், தமிழ், மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கியபோது கிறிஸ்தவராகவே இருந்தார். பின்னர், 2011ஆம் ஆண்டு சென்னையில் அவர் தன்னை இந்து மதத்தில் இணைத்துக் கொண்டார். அன்று முதல் இன்று வரை தவறாது கோயில் கோயிலாக சென்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.