News May 14, 2024
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
Similar News
News December 11, 2025
USA வழியில் மெக்சிகோ: இந்திய பொருள்கள் மீது 50% வரி

இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே USA 50% வரி விதித்துள்ளது. இந்நிலையில், மெக்சிகோவும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் இறக்குமதி பொருள்கள் மீது 50% வரை வரி விதிக்க முடிவெடுத்துள்ளது. 2026 முழுவதும் இந்த வரி அமலில் இருக்கும். இதனால் இந்திய ஜவுளி, ஆட்டோ உதிரி பாகங்கள், பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அமெரிக்காவின் அழுத்தத்தால் தான் மெக்சிகோ இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
News December 11, 2025
நீதிபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஸ்ரீதர் வேம்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில் நீதிபதியின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதற்காக அவரை குறிவைப்பது சரியல்ல என Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது மிரட்டலுக்கான அப்பட்டமான முயற்சி என்றும், இதை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 11, 2025
தவெகவில் வைத்திலிங்கம் இணைய மாட்டார்: டிடிவி

உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்று டிடிவி தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான உடனே, தவெகவில் இணைய ஆசைப்படுகிறீர்களா என தொலைபேசியில் அழைத்து அவரிடம் கேட்டேன். அதற்கு ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என வருத்தப்பட்டார் எனக் கூறிய டிடிவி, அவரை காயப்படுத்துவது போல் இதுபோன்று பரப்பாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.


