India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் ரன்களை குவிப்பது சிரமம் என பஞ்சாப் அணி வீரர் ரைலீ ரூஸோவ் தெரிவித்துள்ளார். அனைத்து டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பதாக ஆதங்கம் தெரிவித்த அவர், தொடர்ந்து ரன்களை கோலியால் மட்டுமே குவிக்க முடியும் என்றார். முன்னதாக பஞ்சாப் – ஆர்சிபி அணிகள் மோதிய போது ரைலீ ரூஸோவ் மற்றும் கோலி இருவரும் சைகைகள் மூலம் மாறிமாறி மோதிக்கொண்டனர்.
காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த தமிழக பிரதிநிதிகளை டெல்லி செல்ல தமிழக அரசு தடை விதித்ததை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழக அதிகாரிகள் டெல்லி செல்ல எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
➤1792 – நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
➤1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
➤1814 – மொனாக்கோவின் ஆட்சி பிரான்சிடம் இருந்து ஆஸ்திரியாவுக்கு கைமாறியது.
➤2004 – அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.
➤2014 – வடக்கு லாவோசில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் உள்ள பண்டிட் பண்ட் மார்க் பகுதியில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் உயிர் மற்றும் பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாஜக தலைமை விளக்கமளித்துள்ளது.
➤ கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும்.
➤ புகைபிடிக்கவோ, புகையிலையை மெல்லவோ, மது அருந்தவோ கூடாது.
➤ காஃபின் கலந்த பானங்களை உட்கொள்ள வேண்டாம்.
➤ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு கொண்ட உணவுகளை தவிர்க்கவும்.
➤கனமான பொருட்களை தூக்காதீர்கள் அல்லது கடுமையான உடல் செயல்பாடுகளைச் செய்யாதீர்கள்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் ஆட்டத்திறன் சுமாராக இருப்பதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் சர்மாவுடன், விராட் கோலி ஓப்பனிங் இறங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறிய அவர், ஜெய்ஸ்வால் தனது ஆட்டத்திறனை விரைவில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகிறார்.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
◾விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
மருத்துவ கல்லூரிகளை பராமரிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். 3 ஆண்டு கால திமுக. ஆட்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறையை போல, மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையும் இருப்பதாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிப்பதாக ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் உள்ளிட்ட சிலரை தவிர மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற அவர், தொடர் தோல்வி வீரர்களுக்கு மன ரீதியாக பின்னடைவை கொடுக்கும் என்றார். பிளே ஆஃப் சுற்றுக்கான அந்த ராஜஸ்தான் அணி தகுதி பெற்ற நிலையில், கடைசி 4 போட்டிகளில் அந்த தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
பிரதமர் மோடி அவதூறு பரப்புரை மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 4 கட்ட வாக்குப்பதிவில் பாஜகவுக்கான ஆதரவு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக மோடி வாய்க்கு வந்ததை எல்லாம் பரப்புரையில் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் மோடி கூறி வருவதற்கு மக்கள் தேர்தலில் தண்டனை கொடுப்பார்கள் என்றார்.
Sorry, no posts matched your criteria.