News May 17, 2024
தொடர் தோல்வியை ஏற்க முடியாது

ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிப்பதாக ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் உள்ளிட்ட சிலரை தவிர மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற அவர், தொடர் தோல்வி வீரர்களுக்கு மன ரீதியாக பின்னடைவை கொடுக்கும் என்றார். பிளே ஆஃப் சுற்றுக்கான அந்த ராஜஸ்தான் அணி தகுதி பெற்ற நிலையில், கடைசி 4 போட்டிகளில் அந்த தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
Similar News
News July 11, 2025
ஜூலை 11…வரலாற்றில் இன்று!

1710 – முதல் இந்திய விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள். * 1966 – திரைப்பட இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். *1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றது. *1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளானதில் 261 பேர் உயிரிழந்தனர். *2006 – மும்பை ரயில் குண்டுவெடிப்புகளால் 209 பேர் உயிரிழந்தனர்.
News July 11, 2025
தலையில் அதிக எண்ணெய் வைத்தாலும் ஆபத்து..!

தினமும் தலைமுடியில் அதிக எண்ணெய் தேய்த்தால் அது முடியின்கால்களை அடைத்துவிடுமாம். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதைப்போன்று அதிக எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் தலையில் சேருவதால் அரிப்பு, பொடுகு அதிகரிக்குமாம். ஆகையால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் படும்படி நன்றாக மசாஜ் செய்து, எண்ணெய் பிசுக்கு போகும் படி கழுவினாலே போதுமானதாம்.
News July 11, 2025
நாங்கள் 11, திமுக பூஜ்ஜியம்: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வந்தீர்களா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.