News May 17, 2024
அவதூறு பரப்புவதே பிரதமரின் வேலையாக உள்ளது

பிரதமர் மோடி அவதூறு பரப்புரை மூலம் மதரீதியாக மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 4 கட்ட வாக்குப்பதிவில் பாஜகவுக்கான ஆதரவு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், அதன் காரணமாக மோடி வாய்க்கு வந்ததை எல்லாம் பரப்புரையில் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் மோடி கூறி வருவதற்கு மக்கள் தேர்தலில் தண்டனை கொடுப்பார்கள் என்றார்.
Similar News
News November 16, 2025
ராசி பலன்கள் (16.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 16, 2025
பிஹார் தேர்தல்: மாரடைப்பால் உயிரிழந்த வேட்பாளர்

பிஹார் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ஜன்சுராஜ் வேட்பாளர் சந்திர சேகர் சிங் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தராரி தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு, தேர்தல் பிரசாரத்தின் போது மாரடைப்பு வந்தது. சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட நிலையில், 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2,271 வாக்குகள் மட்டுமே பெற்று, 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
News November 16, 2025
அடிப்படை புரிதலின்றி பேசும் EPS: TRP ராஜா

தமிழகத்திற்கு வர இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக வெளியேறுவதாக <<18295289>>EPS குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், எவ்வித அடிப்படை புரிதலுமின்றி ஊர் வம்பு பேசும் பெருசுகள் போல EPS குற்றம்சாட்டி வருவதாக அமைச்சர் TRP ராஜா விமர்சித்துள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல எனவும் கூறியுள்ளார்.


