news

News May 15, 2024

நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை

image

ஆந்திரா தேர்தலின்போது முன்னணி நடிகர்களான ராம் சரண், அல்லு அர்ஜூன் பிரசாரத்தில் ஈடுபட்டது பேசுபொருளாக மாறியது. இது குறித்து விளக்கம் அளித்த அல்லு அர்ஜூன், தனக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார். நடுநிலையாக மக்கள் பக்கம் நிற்பதாகக் கூறிய அவர், தனது நண்பர் ஷில்பா ரவி ரெட்டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக தெளிவுபடுத்தியுள்ளார்.

News May 15, 2024

CSKvsRCB இடையே வாழ்வா சாவா போட்டி

image

CSK-RCB இடையேயான நாக் அவுட் ஐபிஎல் போட்டி, வரும் மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே, ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெறும். ஏனெனில், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் ஏற்கெனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்ததால், இன்னும் 1 போட்டியில் வென்றால் கூட ஹைதராபாத் அணியும் தங்களது ப்ளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும்.

News May 15, 2024

பாஜக வேட்பாளருக்கு ₹313 கோடி சொத்து

image

ஒடிஷாவில் சட்டசபை தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிர்வாகியுமான திலீப் ராய் போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பு மொத்தம் ₹313 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

News May 15, 2024

Play Off சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

image

நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக தேர்வாகியுள்ளது. டெல்லி-லக்னோவுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லி அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. இதனால் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆனால், எத்தனையாவது இடம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

News May 15, 2024

சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த மோடி

image

தான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் அரசியலை நாடுவதில்லை என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம், முஸ்லிம்களை குறிவைத்து ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகள் கொண்டவர்கள் என பேசினீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைத்து பேசவில்லை எனத் தெரிவித்தார். முன்னதாக, ராஜஸ்தானில் அவரது பேச்சு சர்ச்சையானது.

News May 15, 2024

IPL: 2ஆவது இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?

image

PBKS-RR இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அசாமில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பஞ்சாப், ஐபில் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறியது. 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தாலும், 2ஆவது இடமா, 3ஆவது இடமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தை பிடிக்குமா ராஜஸ்தான்?

News May 15, 2024

இருவேறு விபத்தில் 9 பேர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பிய நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல, மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது மனைவியும் மகன்களும் உயிரிழந்தனர்.

News May 15, 2024

விபத்துகளை தடுப்பது எப்படி?

image

நேற்றிரவு நெடுஞ்சாலைகளில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இரவு நேரங்களில் தூக்கம் வந்தால் அதற்கான இடத்தில் நிறுத்தி தூங்கிவிட்டு செல்லலாம், நெடுஞ்சாலை விதிகளில் உள்ள வேகக் கட்டுப்பாட்டை பின்பற்றலாம், வாகனத்துக்கு முன்னும் பின்னும் செல்லும் வாகனங்களுடன் போதுமான இடைவெளியை பின்பற்றலாம்., இவற்றை செய்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்கலாம்.

News May 15, 2024

பிரம்மாண்ட வாகன பேரணியில் பங்கேற்கும் மோடி

image

பிரதமர் மோடி மும்பையில் இன்று பிரம்மாண்ட வாகன பேரணியில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் பகுதியில் இருந்து காந்தி நகர் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு இந்த வாகன பேரணி நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா உள்ள 6 தொகுதிகளில், வரும் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் அன்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

News May 15, 2024

நடிகர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள்

image

நடிகர்கள் விவகாரத்து செய்வது வருத்தமாக இருப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை என்பதை உணர்ந்து நடிகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், ரசிகர்களுக்கு நடிகர்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, தனுஷ் & ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ் & சைந்தவி உள்ளிட்டோர் அடுத்தடுத்து திருமண வாழ்வில் இருந்து விலகியுள்ளனர்.

error: Content is protected !!