News May 15, 2024
நடிகர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள்

நடிகர்கள் விவகாரத்து செய்வது வருத்தமாக இருப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை என்பதை உணர்ந்து நடிகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், ரசிகர்களுக்கு நடிகர்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, தனுஷ் & ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ் & சைந்தவி உள்ளிட்டோர் அடுத்தடுத்து திருமண வாழ்வில் இருந்து விலகியுள்ளனர்.
Similar News
News December 13, 2025
டிசம்பர் 13: வரலாற்றில் இன்று

*1952 – நடிகை லட்சுமி பிறந்தநாள். 1963 – டிடிவி தினகரன் பிறந்தநாள். *1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே. 1990 – நடிகை ரெஜினா கஸான்ட்ரா பிறந்தநாள். *2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
News December 13, 2025
இன்சூரன்ஸில் 100% அந்நிய முதலீடு: மக்களுக்கான பயன்?

இன்சூரன்ஸ் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை 74% to 100%ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக திங்களன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பால், சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக இந்தியாவில் கால்பதிக்கும். இதனால், மக்களுக்கு சர்வதேச தரத்திலான சேவை கிடைப்பதோடு, காப்பீட்டுக்கான பிரீமியம் விலையும் குறைய வாய்ப்புகள் உள்ளது.
News December 13, 2025
காந்தி பொன்மொழிகள்

*கூட்டத்தில் நிற்பது எளிதானது, ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும். *பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை. *மனிதகுலத்தின் மகத்துவம் மனிதனாக இருப்பதில் இல்லை, மனிதாபிமானமாக இருப்பதில் உள்ளது.


