India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக, அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். இதற்காக, கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே இறங்கி சோதனை மேற்கொண்டனர். இதில், கிணற்றிலிருந்தது மனித மலம் அல்ல, தேனடை என்பது தெரியவந்துள்ளது.
நியூஸ் க்ளிக் நிறுவனரும், தலைமை செய்தி ஆசிரியருமான பிரபீர் புரகாயஸ்தாவை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீன நிறுவனத்திடம் இருந்து சட்ட விரோத நிதி பெற்ற வழக்கில், கடந்த ஆண்டு உபா சட்டத்தின் கீழ், அவர் கைது செய்யப்பட்டார். அந்நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைமை அதிகாரி அமித் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கைது சட்ட விரோதமானது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு மிகவும் பிடித்த இடம் அமெரிக்காவில் உள்ள ‘நியூ ஜெர்ஸி’ நகரம் தான் என CSK வீரர் தோனி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், உங்களுக்கு எந்த இடம் மிகவும் பிடிக்கும்? என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நியூ ஜெர்ஸி என பதிலளித்த அவர், தனது நண்பர்கள் நிறைய பேர் அங்கு இருப்பதாகவும், அவர்களுடன் கோல்ஃப் விளையாடுவதும், சாப்பிடுவதுமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
‘விடுதலை 2’ படத்திற்கு இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு தேவைப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் சேதுபதி தொடர்புடைய முக்கியமான காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளது என்றும், ஆனால், தேதிகள் அமையாததால் படப்பிடிப்பு தள்ளிப் போவதாகவும் கூறியுள்ளார். மேலும், விடுதலை 2 வெளியான பிறகே, வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கத்தில் நேற்றிரவு லிஃப்ட் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் சிக்கினர். தொடர்ந்து மீட்புப் பணியில் போலீசாரும், பேரிடர் மீட்பு படையினரும் 12 மணி நேரத்திற்கும் மேல் போராடியதில், 14 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. உங்கள் கணக்கில் இந்த மாத தவணை வந்துவிட்டதா? செக் பண்ணுங்க.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர, ராகுல் டிராவிட் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சிலர், குறைந்தது 1 வருடமாவது டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டுமென்று அவரிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக மறுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வி.வி.எஸ்.லட்சுமணும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. அமலாக்கத்துறை கால தாமதப்படுத்தவே அவகாசம் கோருவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிக VFX காட்சிகள் இருந்ததால், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியவில்லை. அதேசமயம், தனுஷின் ‘ராயன்’ படமும் ஜூனில் வெளியாவதால், படம் வெளியாவது தள்ளிப் போனது. தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. திறந்தவெளி கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் 100 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், தடுப்பு சுவரில் அமர்ந்து சிலர் கிணற்றில் மலம் கழித்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவத்திற்கே முடிவு கிடைக்காத நிலையில், அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.