India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் மாம்பழங்களின் வரத்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3இல் ஒரு பங்காக குறைந்துள்ளது. தொடர்ந்து உயரும் வெப்பநிலை, கடுமையான மழை, சூறை காற்று ஆகிய பருவநிலை மாற்றங்களால் இந்தாண்டு மாம்பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு குறைந்த அளவிலான மாம்பழங்களே விற்பனைக்கு வருவதால், அதன் விலை கிலோ ₹300 வரை உயர்ந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் விலை குறைவாகவே உள்ளது.
தேர்தல் முடிவுக்குப் பின் INDIA கூட்டணிக்கு ஆதரவளிப்போம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில், மம்தா பாஜக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறிய காங்., எம்பி ஆதிர் ரஞ்சன் செளத்ரி, மம்தாவை நம்ப நாங்கள் தயாராக இல்லை என்றார். மேலும், INDIA கூட்டணி 40 இடங்களில் கூட வெற்றிபெறாது எனக் கூறிய மம்தா, தற்போது ஆதரவளிப்பதாக கூறுவது INDIA கூட்டணியின் வெற்றியைக் காட்டுகிறது என்றார்.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி பூமியிலிருந்து 550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 3 நட்சத்திர அமைப்பை படம் பிடித்துள்ளது. இதில், HP Tau, HP Tau G2, HP Tau G3 ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. HP Tau நட்சத்திரம் மிகவும் பிரகாசமானது. முக்கோண அமைப்பில் மேல் பக்கமாக அமைந்துள்ள சூரியனை போன்ற இந்த நட்சத்திரம், ஒரு கோடி வயதே ஆன குழந்தை என கூறப்படுகிறது. சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில், +2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் மே 20 வரை விண்ணப்பிக்கலாம். மே 28 – 30 சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன் 10 – 15, 24 – 29 வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
RRக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய PBKS வீரர் ஹர்ஷல் படேல் (22) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் ஹர்ஷல் படேல், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, சாஹல், கலீல் அஹமது என முதல் 5 இடங்களில் இந்திய வீரர்களே உள்ளனர். இதில் MI, PBKS எலிமினேட் ஆகியுள்ளதால் ஹர்ஷல், பும்ரா இருவரும் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்காக இன்றும், மே 20ஆம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்யவிருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யவிருக்கிறது. வடக்கு மாவட்டங்களில் மட்டும் அதிக மழையை எதிர்பார்க்க முடியாது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு வீடியோவை ஒளிபரப்பிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டதால் அவரது முன் ஜாமின் மனு காலாவதியானதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஃபெலிக்ஸ் கைது மற்றும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அவரது மனைவி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. இன்று கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் 21 செ.மீட்டருக்கு மேல் அதிகனமழை பெய்யும் என்றும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சிறையிலிருந்து கெஜ்ரிவால் வெளியே வந்ததால் காங்கிரசுக்குதான் பாதிப்பு, பாஜகவுக்கு அல்ல என அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலின் பிரசாரம் டெல்லி, பஞ்சாப் தேர்தலில் மட்டுமே எதிரொலிக்கும் எனக் கூறிய அவர், பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அதிகரிப்பதால், அங்கு தனித்து நிற்கும் காங்கிரசுக்கு பாதிப்பு என்றார். அங்கு பாஜகவுக்கு வாய்ப்புகள் குறைவு எனவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை ஜூலை 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அமலாக்கதுறை தரப்பில் வாதாடும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், வேறு ஒரு வழக்கில் வாதிட்டு வருவதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ED கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.