News May 16, 2024
முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள்

RRக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய PBKS வீரர் ஹர்ஷல் படேல் (22) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். இந்தப் பட்டியலில் ஹர்ஷல் படேல், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, சாஹல், கலீல் அஹமது என முதல் 5 இடங்களில் இந்திய வீரர்களே உள்ளனர். இதில் MI, PBKS எலிமினேட் ஆகியுள்ளதால் ஹர்ஷல், பும்ரா இருவரும் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
Similar News
News February 7, 2026
10th Pass போதும்.. ₹28,000 சம்பளம்: APPLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22,000 குரூப் – D பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி: 10th, ஐடிஐ. வயதுவரம்பு: 18- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2026. சம்பளம்: ₹28,000 வரை கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்களுக்கு ₹250, மற்றவர்களுக்கு ₹500. <
News February 7, 2026
இந்தியா – அமெரிக்கா இடையே புதிய அத்தியாயம்: PM மோடி

‘வளர்ந்த பாரதம் 2047’ உருவாக்கும் புதிய ஒப்பந்தங்கள் இந்தியா – USA இடையே கையெழுத்தாகியுள்ளதாக PM மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகள், MSME, ஸ்டார்ட்அப், மீனவர்கள் என பலருக்கும் வாய்ப்புகளை அள்ளித் தரும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவில் முதலீடுகள் குவிய வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
திமுகவில் இருந்து 2,000 பேர் விலகினர்.. ஸ்டாலினுக்கு ஷாக்

கிருஷ்ணகிரி நகராட்சியின் Ex சேர்மன் பரிதா நவாப் தனது ஆதரவாளர்கள் 2,000 பேருடன் அதிமுகவில் இணைந்தார். அதில் பெரும்பாலானோர் சிறுபான்மையினர் என்பதால் அதிமுக தலைமை மகிழ்ச்சி அடைந்துள்ளது. டெல்டா, தென் மாவட்டங்களில் அதிமுக Ex MLA-க்கள் பலரை திமுக தங்கள் வசம் இழுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் திமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை EPS, அதிமுகவில் சேர்த்து வருகிறார்.


