news

News May 16, 2024

கட்சியை கட்டமைக்கும் பணியில் தீவிரம் காட்டும் கமல்

image

2026 தேர்தலுக்கு முன்பாக கட்சியின் கட்டமைப்பை உறுதியாக்கும் பணியில் மநீம தலைவர் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ‘கட்சியில் கட்டமைப்பே இல்லை’ என திமுக சீனியர்கள் மக்களவைத் தேர்தலின்போது சொன்னதாகக் கூறப்படுகிறது. இதுவே வருங்காலங்களில் சீட் பங்கீட்டில் பிரச்னையை கிளப்பிவிடக் கூடாதென்ற நோக்கிலும், கட்சி நலன் சார்ந்தும் தனி திட்டத்தை கமல் தொடங்கியுள்ளார்.

News May 16, 2024

ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா?

image

தொலைதூர ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில், லோயர் பெர்த், மிடில் பெர்த், அப்பர் பெர்த் என 3 இருக்கைகள் உண்டு. இதில் மிடில் பெர்த் இருக்கைக்கு தனி விதி உள்ளது. அதில், மிடில் பெர்த்தை பகலில் கீழே எடுத்துவிட்டு தூங்கக் கூடாது, இரவில் 10 மணி முதல் காலை 6 மணி வரையே பயன்படுத்த வேண்டும், அதன்பிறகு யாரேனும் தூங்கினால் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்க சக பயணிகளுக்கு உரிமை உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

News May 16, 2024

அயோத்தி பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த சசிகுமார்

image

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வரும் வட இந்திய குடும்பத்தினரை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கும் புதிய படத்திலும் சசிகுமார் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

News May 16, 2024

இதுவரை 1,57,623 வாகனங்களுக்கு அனுமதி

image

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கடந்த மே 7 முதல் இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், மே 7 முதல் இன்று வரை 1,57,623 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதன் மூலம் 8.07 லட்சம் பயணிகள் வெவ்வேறு நாள்களில் பயணித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் நீலகிரிக்கு 4,222 வாகனங்களில் சுமார் 22,077 பேர் பயணித்துள்ளனர்.

News May 16, 2024

கரீனாவை விவாகரத்து செய்கிறாரா சைஃப் அலிகான்?

image

பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியான சைஃப் அலிகான் & கரீனா கபூர் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 2008 ஆம் ஆண்டு சைஃப் தனது இடது கையில் பச்சை குத்தியிருந்த கரீனாவின் பெயரை அகற்றி, அந்த இடத்தில் திரிசூலத்தை வரைந்துள்ளார். மும்பை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் வீடியோ எடுத்தபோது, அதனை அவர் மறைக்க முயன்றார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

News May 16, 2024

ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

image

10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான தலைமை ஆசிரியர்களுக்கு விழா நடத்தப்படும் எனக் கூறியுள்ள கல்வித்துறை, தமிழில் 100/100 எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

26 சீன நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கத் தடை

image

26 சீன ஜவுளி நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. சின்சியாங்கில் வசிக்கும் சிறுபான்மை மக்களை கட்டாயப்படுத்தி பணி வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்நடவடிக்கையை அமெரிக்க அரசு நிர்வாகம் எடுத்துள்ளது. இதையும் சேர்த்து, 66 சீன நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News May 16, 2024

காரை துபாய் கொண்டு சென்ற கேரள தொழிலதிபர்

image

கேரளாவைச் சேர்ந்த திலிப் ஹெலிபிரான், துபாயில் வர்த்தகம் செய்கிறார். அவர் இங்கு தான் வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் காரை பிரிய மனமில்லாமல் துபாய்க்கு கொண்டு சென்றுள்ளார். கேரளாவில் இருந்து கப்பல் மூலம் துபாய்க்கு காரை கொண்டு சென்ற அவர், உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா முன்பு நிறுத்தி புகைப்படம் எடுத்து வெளியிட்டு, அதில் உங்கள் காரை நன்கு கவனித்து கொள்ளுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்

News May 16, 2024

கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

image

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க வேப்பிலை, சீரகம், மிளகு, கற்பூரவள்ளி ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக தயார் செய்யவும். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News May 16, 2024

சின்னத்திரை நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம்

image

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சக்திவேல்’ என்ற தொடரில் நடித்து வரும் சந்தியா – முரளி இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். முக்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணத் தேதி அறிவிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர். சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு, பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளராக சந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!