News May 16, 2024

காரை துபாய் கொண்டு சென்ற கேரள தொழிலதிபர்

image

கேரளாவைச் சேர்ந்த திலிப் ஹெலிபிரான், துபாயில் வர்த்தகம் செய்கிறார். அவர் இங்கு தான் வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் காரை பிரிய மனமில்லாமல் துபாய்க்கு கொண்டு சென்றுள்ளார். கேரளாவில் இருந்து கப்பல் மூலம் துபாய்க்கு காரை கொண்டு சென்ற அவர், உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபா முன்பு நிறுத்தி புகைப்படம் எடுத்து வெளியிட்டு, அதில் உங்கள் காரை நன்கு கவனித்து கொள்ளுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்

Similar News

News April 11, 2026

தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) 44 டாலர்கள் குறைந்து 4,748 டாலர்களுக்கு விற்பனையாகிறது. வெள்ளி 1 அவுன்ஸ் 75 டாலர்களுக்கு விற்பனையாகி வருகிறது. ஈரான் பணியாவிட்டால் மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் கூறியுள்ளதால், போர் பதற்றம் மீண்டும் தொற்றியுள்ளது. இதேநிலை நீடித்தால் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

News April 11, 2026

விஜய்க்கு பதிலடி… ராகுலை நகர்த்தும் ஸ்டாலின்

image

உண்மையான காங்கிரஸ் தவெக பக்கம் இருப்பதாக விஜய் கூறியதற்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்தார். எனினும் இதில் தேசிய தலைமை பதில் தராவிட்டால் காங்கிரஸின் ஓட்டு விஜய்க்கு செல்ல வாய்ப்புள்ளதாக திமுக தலைமை கருதுகிறது. அதன்படி தமிழகம் வரும் ராகுல் காந்தி, விஜய்யின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டியதுடன், அவரை விமர்சிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

News April 11, 2026

இனி ₹10,000-க்கு மேல் அனுப்பினால் லேட் ஆகும்!

image

பொதுமக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடியில் சிக்குவதை தடுக்கும் நோக்கில் RBI முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனி ₹10,000-க்கும் அதிகமான தொகையை டிஜிட்டல் முறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு அனுப்பும்போது, ஒரு மணிநேரம் கழித்தே சென்றடையும் என்ற புதிய விதியை முன்மொழிந்துள்ளது. இதுகுறித்து மே 8-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!