news

News August 19, 2024

பாஜகவுடன் திமுக இணக்கமாக செல்லாது: கே.பாலகிருஷ்ணன்

image

பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக அரசு செய்யக்கூடிய நல்ல விஷயங்களை ஆதரிப்போம் என்று கூறிய அவர், மக்கள் விரோத அரசின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்போம் எனவும் தெரிவித்தார். பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் இடம்பெறும் என்றும் கூறினார்.

News August 19, 2024

அரசுப் பள்ளிகளுக்கு விரைவில் இரவு காவலாளிகள்

image

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு, விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செஞ்சியில் பேட்டியளித்த அவர், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஹைடெக் லேப் மற்றும் இரவு நேரக் காவலர்கள், தூய்மை பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கூடுதல் கழிப்பறைகள் கட்டி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சூரி

image

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கருடன் படத்தின் வெற்றிக்கு பிறகு, சூரிக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதிகம் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இவர் இயக்கத்தில், விமல் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

News August 19, 2024

மத்திய அரசுடனான MCI பேச்சுவார்த்தை தோல்வி

image

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தில் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் தொடரும் என, அறிவித்துள்ள MCI, உச்ச நீதிமன்ற முடிவுக்கு காத்திருப்பதாக கூறியுள்ளது. பெண் மருத்துவர் கொலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டம், மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரி போராட்டம் நடந்து வருகிறது.

News August 19, 2024

Amazon Pay வசதியை தனியாக பிரிக்க திட்டம்

image

இந்தியாவில் UPI பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜிபே, ஃபோன்பே, பேடிஎம் ஆகிய செயலிகள் மூலம் பொதுமக்கள் பெரும்பாலான பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், அந்த செயலிகளுக்கு போட்டியாக அமேசான் பே என்ற தனி செயலியை களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது அமேசான் ஷாப்பிங் செயலியில் உள்ள இந்த வசதியை தனியாக பிரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

சித்தராமையா மீதான வழக்குக்கு இடைக்கால தடை

image

நில முறைகேடு வழக்கில் கர்நாடக CM சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அம்மாநில HC இடைக்கால தடை விதித்துள்ளது. நில மோசடி புகாரில் வழக்குத் தொடர அனுமதி அளித்து அம்மாநில கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சித்தராமையாக வழக்கு தொடர்ந்திருந்தார். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சித்தராமையா மனைவி பார்வதியிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

News August 19, 2024

மலையாள நடிகைகளுக்கு பாலியல் நெருக்கடி

image

மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது. முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும், மறுக்கும் நடிகைகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நடிகைகளை பாலியல் ரீதியாக மிரட்டும் நடிகர்களின் பட்டியலில், முன்னணி நடிகர்களே அதிகம் இருப்பதாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.

News August 19, 2024

ராணுவ Ex ஜெனரல் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

image

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ Ex தளபதி, ஜெனரல் பத்மநாபனின் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், பத்மநாபனின் தலைமையும், தேசப் பாதுகாப்பிற்கான அவரது அர்ப்பணிப்பும், என்றும் நினைவுகூரப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு CM ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

நவம்பரில் உற்பத்தியை தொடங்குகிறது Tata Electronics

image

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தி ஆலை இந்த ஆண்டு நவம்பரில் இருந்து உற்பத்தியைத் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த ஆலை, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 4ஆவது அசெம்பிளி ஆலையாகும். இந்த ஆலையில் சுமார் 50,000 ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்கள்?

image

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. இதில் 8 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள சில அணிகள் பிசிசிஐயை வலியுறுத்தி வருகின்றன. அப்படி 8 வீரர்களை தக்கவைக்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் ருதுராஜ், ஜடேஜா, தோனி, துபே, தீபக் சாஹர், தேஷ்பாண்டே (அ) ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பதீரனா, கான்வே ஆகியோர் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து உங்கள் கமெண்ட் என்ன?

error: Content is protected !!