News August 19, 2024
ராணுவ Ex ஜெனரல் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ Ex தளபதி, ஜெனரல் பத்மநாபனின் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், பத்மநாபனின் தலைமையும், தேசப் பாதுகாப்பிற்கான அவரது அர்ப்பணிப்பும், என்றும் நினைவுகூரப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு CM ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
கூட்டணி இருக்கா? காங்கிரஸ் பதிலால் திமுக அதிர்ச்சி

திமுக கூட்டணியில் காங்., நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து காங்., தலைவர்களிடம் தலைமை கருத்து கேட்டுள்ளதாக கூறிய அவர், அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளதால் அதனடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் என்றார். இவருடைய இந்த பதில் திமுகவிற்கு சற்று அதிர்ச்சியளித்திருப்பதாக பேசப்படுகிறது.
News January 21, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3000.. தமிழக அரசு அறிவிப்பு

TN-ல் 96% பேருக்கு பரிசு தொகுப்பு கிடைத்த நிலையில், தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் என 4% பேருக்கு இந்த பரிசு தொகுப்பை பெற முடியாத சூழல் எழுந்திருக்கிறதாம். எனவே ₹3000 பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பணத்தை வாங்காதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு அறிவித்துள்ளார்.
News January 21, 2026
பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

சம்பாதிப்பதை போல, பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதிலும் கவனம் தேவை. இல்லையேல், திடீர் இன்னல் ஏற்படலாம். அதனால், பணத்தை 50:30:20 விதிப்படி பிரிப்பது நல்லது. அத்தியாவசிய தேவைக்கு 50% *விரும்பும் விஷயங்களுக்கு 30% *சேமிப்புகளுக்கு 20%. ஒரு ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க ஆசை வந்தால், உடனே கடைக்கு கிளம்ப வேண்டாம். அப்பொருள் தேவையா என ஒருநாள் பொறுமையாக யோசிங்க. உங்களுக்கே பதில் கிடைக்கும்.


