India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1990களுக்கு பிறகு வெளியான அனைத்து ஆக்ஷன் படங்களுக்கு பாட்ஷா திரைப்படம்தான் அடிப்படையாக இருப்பதாக நடிகர் SJ சூர்யா கூறியுள்ளார். ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட ப்ரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், “பாட்ஷா ஃபார்முலாவைதான் இயக்குநர் ஆத்ரேயாவும் பயன்படுத்தியுள்ளார். ஞாயிறு தொடங்கி வெள்ளி வரை மாணிக்கமாக இருக்கும் நானி, சனிக்கிழமை மட்டும் பாட்ஷாவாக மாறுவது போல கதையை உருவாக்கி உள்ளார்” என்றார்.
வறட்டு இருமல், நெஞ்சு சளி, சுவாசக்கோளாறு பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் முசுக்கை எனும் அயிலேயத்திற்கு இருப்பதாக குணப்பாடல் கூறுகிறது. பினாலிக், யூஜெனால், சபோனின்ஸ், டெர்பெனாய்டுஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் வேருடன், ஆடாதோடை, கண்டங்கத்திரி, திப்பிலி, மிளகு, கிராம்பு ஆகியவற்றைப் பொடித்து, தேனில் குழைத்து வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட உடலில் அதிகரித்த கபமும் பித்தமும் குறையும்.
நாதக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸை, கட்சியிலிருந்து சீமான் நீக்கியுள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசியதாக, திருச்சி SP வருண்குமார் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு, சாட்டை துரைமுருகன் கொடுத்த தகவலின்படி சீமான் பேசியதாக, தலைமையின் ஒப்புதல் இன்றி, நேற்று ஃபெலிக்ஸ் தன்னிச்சையாக விளக்கக்கடிதம் அளித்தார். இந்நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் குறித்த அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ தினமான ஆக.8ஆம் தேதி ரெட் லைட் ஏரியாவுக்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு அடுத்தடுத்து 2 பெண்களுடன் தனிமையில் இருந்த அவர், பிறகு அதிக அளவில் மது அருந்தியுள்ளார். பின்னரும் வேட்கை அடங்காமல், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சஞ்சய் ராய் சென்று, குற்றத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மோடி 3.0 அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில், அறிவித்த 4 விஷயங்களில் இதுவரை பின்வாங்கியுள்ளது. ஒளிபரப்பு சேவை ஒழுங்குமுறை மசோதாவை திரும்பப் பெற்ற அரசு, வக்ஃப் மசோதாவினை ஆய்வு செய்ய JPC-க்கு அனுப்பியது. கடும் எதிர்ப்பு LSGT வரி குறியீட்டு பலன்களைக் குறைத்து, பின்னர் அதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இப்போது லேட்ரல் என்ட்ரி. பெரும்பான்மை பலம் இல்லாததே இந்த தடுமாற்றங்களுக்கு காரணமெனக் கூறப்படுகிறது.
*தைவான்: சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தைவான் அரசு ஜியுபெங் ராணுவ தளத்தில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. *மெக்சிகோ: என்.ஜி.ஓ மூலம் மெக்சிகோ உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என, அதிபர் ஒப்ராடோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். *ஸ்காட்லாந்து: சாக்சாவோர்ட் ஏவுதளத்தில் சோதனை முயற்சியின்போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ராக்கெட் வெடித்து சிதறியது.
இண்டிகோ விமானத்தில் லக்னோ – பெங்களூரு பயணித்த வழக்கறிஞர் ஷ்ரயன்ஷ் சிங்கிடம் ரூ.10,023 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டண விவரத்தில் cute fee ரூ.50 என குறிப்பிட்டிருந்த நிலையில், அழகாக இருந்தால் கட்டணம் வசூலிப்பார்களா? என அவர் வலைதளத்தில் கேள்வியெழுப்பினார். அது சோதனைக் கருவிக்கான கட்டணம் என பதிலளிக்கப்பட்டது. அதற்கு அவர், மக்கள் வரியில் வாங்கிய கருவிகளுக்கு பயணிகளிடம் கட்டணமா? எனக் கேட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் டைரக்டர் நெல்சனின் மனைவி மோனிஷாவுக்கு தொடர்பில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது. போலீஸ் தரப்பு கூறியபோது, <<13898071>>நெல்சன்<<>> மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டு 10 நாள்களுக்கும் மேலாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடியிடம் செல்போனில் பேசியதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதில், அவருக்கு சம்பந்தமில்லை என தெரிய வந்துள்ளதாக போலீஸ் குறிப்பிட்டுள்ளது.
ரேஷன் கடைகளின் பெயரை “ஜன் போஷன் கேந்திரா” என மாற்றும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, உ.பி. மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 கடைகளுக்கு அப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் 1.50 லட்சம் கடைகள் பெயர் மாற்றப்படவுள்ளன. இக்கடைகளில் இனி 50% சத்து தானியங்கள் விற்கப்பட உள்ளன.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். இதற்கு அவரது காதல் மனைவி பெக்கி பாஸ்டன், 2ஆவது முறையாக கருவுற்றிருப்பதே காரணமாகும். இது தொடர்பாக பெக்கி தனது இன்ஸ்டாவில், கம்மின்ஸ் மீண்டும் தந்தையாகப் போகிறார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என பதிவிட்டுள்ளார். மகன் ஆல்பி பிறந்து ஓராண்டு கழித்து, இந்த ஜோடி 2022இல் திருமணம் செய்து கொண்டது.
Sorry, no posts matched your criteria.