News August 21, 2024
30 நொடிகளில் உலகைச் சுற்றி

*தைவான்: சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தைவான் அரசு ஜியுபெங் ராணுவ தளத்தில் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. *மெக்சிகோ: என்.ஜி.ஓ மூலம் மெக்சிகோ உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என, அதிபர் ஒப்ராடோர் எச்சரிக்கை விடுத்துள்ளார். *ஸ்காட்லாந்து: சாக்சாவோர்ட் ஏவுதளத்தில் சோதனை முயற்சியின்போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ராக்கெட் வெடித்து சிதறியது.
Similar News
News January 22, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 588 ▶குறள்: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். ▶பொருள்: ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியை, மற்றோரு உளவாளி கொண்டு வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
News January 22, 2026
CM ஸ்டாலினிடம் EPS வலியுறுத்தல்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண CM ஸ்டாலினை EPS வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் X தளத்தில், டந்த 6 மாதங்களாக வளர்ப்பு கூலியை உயர்த்தக் கோரி போராடி வரும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளுடன் திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகிறது. அவர்களை உடனடியாக விடுவித்து, சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


