News August 21, 2024
அழகா இருந்தா கட்டணம் வசூலிப்பீங்களா?

இண்டிகோ விமானத்தில் லக்னோ – பெங்களூரு பயணித்த வழக்கறிஞர் ஷ்ரயன்ஷ் சிங்கிடம் ரூ.10,023 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டண விவரத்தில் cute fee ரூ.50 என குறிப்பிட்டிருந்த நிலையில், அழகாக இருந்தால் கட்டணம் வசூலிப்பார்களா? என அவர் வலைதளத்தில் கேள்வியெழுப்பினார். அது சோதனைக் கருவிக்கான கட்டணம் என பதிலளிக்கப்பட்டது. அதற்கு அவர், மக்கள் வரியில் வாங்கிய கருவிகளுக்கு பயணிகளிடம் கட்டணமா? எனக் கேட்டுள்ளார்.
Similar News
News January 24, 2026
நன்மைகள் கொட்டி கிடக்கும் கரிசலாங்கண்ணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤கரிசலாங்கண்ணியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ➤நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் இது வெளியேற்றும் ➤குழந்தைகளுக்கு 2 சொட்டு கரிசலாங்கண்ணிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும் ➤மஞ்சள் காமாலை போன்ற அனைத்து வகை காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்து. SHARE IT.
News January 24, 2026
PM-ஐ கையோடு மதுரைக்கு கூட்டிபோகணும்: உதயநிதி

2017-ல் மதுரையில் எய்ம்ஸ் வரப்போவதாக சொல்லி, 2019-ல் அதற்கான செங்கல்லை வைத்தனர். 8 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை என உதயநிதி கூறியுள்ளார். தேர்தல் வருவதால் PM மோடி 10 முறையாவது TN வருவார் என்ற அவர், அப்படி வருபவரை மதுரைக்கு கூட்டிச்சென்று எய்ம்ஸுக்கு விடிவுகாலம் வரச்செய்ய வேண்டும் என்றார். மேலும், அது நடந்தால் TN மக்கள் அவருக்கு நன்றி சொல்வர் எனவும் பேசியுள்ளார்.
News January 24, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிக அளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $78.97 உயர்ந்து $4,988.56-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $7.17 உயர்ந்து $103.3 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் நேற்று மாலை குறைந்த தங்கம், வெள்ளி விலை இன்று (ஜன.24) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


