India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய பிரபாகரனுக்கு விஜயகாந்தின் முதலாம் நினைவு தினம் முடிந்த பிறகு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் திருமணம் நடைபெறவில்லை. விஜயகாந்தின் மூத்த மகனான இவர், கடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றியை தவறவிட்டார்.
ஓலா நிறுவனத்தின் CEO பாவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு கடந்த 7 வர்த்தக நாள்களில் ₹20,856 கோடியாக அதிகரித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது முதலே அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ₹30க்கு பட்டியலிடப்பட்ட பங்குகள், தற்போது ₹157 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. பாவிஷ் அகர்வால் 30%, அதாவது 132.39 கோடி பங்குகளை வைத்திருக்கிறார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: நீத்தார் பெருமை ▶குறள் எண்: 30 ▶குறள்: அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். ▶பொருள்: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
உலகக்கோப்பையை வென்ற உணர்ச்சி மிகுந்த தருணத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நாட்டிற்கும் முக்கியமானது எனவும், கோப்பையை நாட்டிற்கு கொண்டு வந்து அனைவருடனும் கொண்டாடியது பெருமை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் டிராவிட், அகார்கர், ஜெய்ஷா ஆகிய 3 பேருக்கும் நன்றி சொல்ல கடமைபட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். அச்சுதாபுரத்தில் உள்ள Escientia ஃபார்மா ஆலையில் ரியாக்டர் வெடித்து விபத்து நிகழ்ந்தது.
தவெக கொடியை அறிமுகப்படுத்தி நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் தொடங்கும் விஜய்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, இலட்சிய உறுதிகொண்டு களம் காண வரும் விஜய், தமிழக அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
‘இந்தியன் 2’ படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க சிவகார்த்திகேயனை இயக்குநர் ஷங்கர் அணுகியதாகவும், ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் வேறு வழியில்லாமல் சித்தார்த்தை நடிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலையில் வெளியான இந்த படம், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இருப்பினும், கடும் விமர்சனங்களை பெற்றாலும், படம் வணிக ரீதியில் நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஆகஸ்ட் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
உணவு டெலிவரி நிறுவனமான Zomato, Paytmஇன் திரைப்படம், விளையாட்டு உள்ளிட்ட டிக்கெட் விற்பனைக்கான டிக்கெட் தளத்தை ₹2,048 கோடிக்கு கையகப்படுத்த விண்ணப்பித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியாக ஓராண்டு ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதுவரை இந்த சேவையை Paytm தொடரும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. TicketNew, Insider ஆகிய நிறுவனங்களை சில ஆண்டுகளுக்கு முன் Paytm வாங்கி இருந்தது.
Sorry, no posts matched your criteria.