News August 22, 2024
ஆன்லைன் டிக்கெட் விற்பனை சந்தையில் Zomato

உணவு டெலிவரி நிறுவனமான Zomato, Paytmஇன் திரைப்படம், விளையாட்டு உள்ளிட்ட டிக்கெட் விற்பனைக்கான டிக்கெட் தளத்தை ₹2,048 கோடிக்கு கையகப்படுத்த விண்ணப்பித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதியாக ஓராண்டு ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதுவரை இந்த சேவையை Paytm தொடரும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. TicketNew, Insider ஆகிய நிறுவனங்களை சில ஆண்டுகளுக்கு முன் Paytm வாங்கி இருந்தது.
Similar News
News November 16, 2025
திமுகவினர் நல்ல டாக்டரை பார்க்கலாம்: அண்ணாமலை

பிஹாரில் நடந்தது தமிழகம், புதுச்சேரியிலும் நடக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். SIR-ல் என்ன தவறு இருக்கிறது என்பதை சொல்லிவிட்டு விஜய் எதிர்கட்டும். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் செய்தால், ராகுல் காந்திக்கு கிடைத்த பனிஷ்மெண்ட் விஜய்க்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 200+ தொகுதிகளில் வெல்வோம் என கூறி வரும் திமுகவினர் நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
International 360°: சீனா – ஜப்பான் இடையே பதற்றம் அதிகரிப்பு

*BBC மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு. *ஆப்பிள் வாட்ச் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்கா ஆலோசனை. *‘Harry Potter’ நாவல் வெளிவர முதன்மை காரணமாக இருந்த பேரி கன்னிங்காம், பதிப்பு துறையில் இருந்து ஓய்வு பெற உள்ளார். *போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீனர்கள் ஜப்பானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல். *சூடானின் துணை ராணுவப்படையிடம் இருந்து 2 நகரங்களை ராணுவம் கைப்பற்றியது.
News November 16, 2025
நவம்பர் 16: வரலாற்றில் இன்று

*உலக சகிப்புத் தன்மை நாள். *தேசிய பத்திரிக்கை தினம். *1801 – விடுதலை போராட்ட வீரர் ஊமைத்துரை இறந்தநாள். *1849 – அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டி, ரஷ்ய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. *1945 – யுனெஸ்கோ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. *1962 – நடிகை அம்பிகா பிறந்தநாள். *1983 – இசையமைப்பாளர் தமன் பிறந்தநாள்.


