News August 22, 2024
OLA CEO காட்டுல பண மழைதான்..!

ஓலா நிறுவனத்தின் CEO பாவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு கடந்த 7 வர்த்தக நாள்களில் ₹20,856 கோடியாக அதிகரித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது முதலே அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ₹30க்கு பட்டியலிடப்பட்ட பங்குகள், தற்போது ₹157 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. பாவிஷ் அகர்வால் 30%, அதாவது 132.39 கோடி பங்குகளை வைத்திருக்கிறார்.
Similar News
News November 11, 2025
தேர்தல் முடிவை தீர்மானித்த ₹10,000

பிஹார் NDA கூட்டணியே வெல்லும் என பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு ₹10,000 தந்த பாஜகவின் திட்டம் தான் இந்த மெகா வெற்றிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. CM பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தேர்தலுக்கு முன்பே 1 கோடி பெண்களுக்கு ₹10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதுடன் ₹2 லட்சம் கடனுதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த மாடலை மற்ற கட்சிகளும் இனி பின்பற்றக் கூடும்.
News November 11, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசு வழங்கும் பணியை அரசு இப்போதே தொடங்கிவிட்டது. இன்னும் 4 நாள்களில்(நவ.15 முதல்) ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் நடைபெற உள்ளது. மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.
News November 11, 2025
கண்களில் காவியம் சேலையில் ஓவியம்: கயல் ஆனந்தி

‘கயல்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் ஆனந்தி. இதனாலேயே அவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரும் வந்தது. நேர்த்தியான நடிப்பு, அழகான புன்னகை என ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தார். இவர் சமீபத்தில், இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்களில் கலை வடிவமாக ஒளிர்கிறார். கண்களில் காவியமாகவும், சேலையில் ஓவியமாகவும் உள்ளார். இந்த போட்டோஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.


