news

News August 9, 2024

BIG BREAKING: வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், முதல் செட் சுற்றில் அதிகபட்சமாக 89.45 மீ., தூரத்துக்கு ஈட்டி எறிந்து 2ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். இதன் மூலம் இரு ஒலிம்பிக்ஸில் 2 பதக்கங்களை வென்ற 4வது இந்தியர் & தனிநபர் பிரிவில் வென்ற 3வது இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

News August 9, 2024

தர்ஷனுக்கு வீட்டு உணவு சிறை அதிகாரிகள் மறுப்பு

image

ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் உள்ள, கன்னட நடிகர் தர்ஷனுக்கு வீட்டு உணவு சாப்பிட அனுமதி வழங்க சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கிற்காக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், “சிறை உணவை சாப்பிடுவதால், தர்ஷனுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சிறையின் உணவு மெனுவில் என்ன இருக்கிறதோ, அதன்படி உணவு கொடுக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

News August 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஆகஸ்ட் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 9, 2024

குடும்ப வணிகத்தில் கோலோச்சும் அம்பானி

image

இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க வணிக குடும்பங்களின் பட்டியலில் ₹25.75 லட்சம் கோடியுடன் அம்பானி குடும்பம் முதலிடத்தில் உள்ளதாக ஹுருன் இந்தியா தெரிவித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் கோலோச்சி வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில், பஜாஜ் (₹7.13 லட்சம் கோடி), பிர்லாஸ் (₹5.39 லட்சம் கோடி) முறையே 2& 3ஆவது இடங்களில் உள்ளது.

News August 9, 2024

10 ஆண்டுகளில் 1,733 சதுர கி.மீ., பரப்பு காடுகள் அதிகரிப்பு!

image

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி பணிகளுக்காக 1,733 சதுர கி.மீ., பரப்பு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு இழந்த காடுகளின் பரப்பை ஈடுசெய்யும் திட்டத்தின் கீழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், மாற்று செயல் திட்டங்களின் மூலம் காடுகளின் பரப்பை 21,761 சதுர கி.மீ., தூரம் அதிகரிக்க செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் *வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை விரிவாக ஆராய்வதற்காக தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்படும் – கிரண் ரிஜிஜு *வங்கதேசத்தின் இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். *Paris Olympics: ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை வென்றது. *பணவீக்கம் ஜூன் மாதம் 5.1%ஆக அதிகரித்துள்ளது – RBI

News August 9, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஆகஸ்ட் 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News August 9, 2024

பெங்களூரில் இனி இரவு 1 மணி வரை கொண்டாட்டம்

image

இந்தியாவின் ஐடி ஹப் ஆக விளங்கும் பெங்களூரில் இரவு நேர பார்ட்டிகளுக்கு பஞ்சமே இருக்காது. இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள பார்களையும், ஓட்டல்களையும் இரவு 11 மணியுடன் மூட கர்நாடகா அரசு உத்தரவிட்டது. இதனால் அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஓட்டல்கள், மதுபான பார்கள், நட்சத்திர விடுதிகளை இரவு 1 மணி வரை திறந்து வைக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

News August 8, 2024

தூக்கம் வரவில்லையா? அப்போ இதை குடியுங்கள்!

image

உடலையும் மனதையும் சீர்படுத்தும் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுபவரா நீங்கள்? இனி கவலையே வேண்டாம். ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும் மெலெட்டினின் ஹார்மோனை சுரக்க வைக்கும் ஆற்றல் நிறைந்தது திப்பிலி. திப்பிலி பொடியை மிதமான சூட்டில் பாலுடன் சிறிது பனைவெல்லம் சேர்த்தால் திப்பிலி பால் தயார். இதனை படுப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு குடியுங்கள் போதும் சரியான நேரத்தில் தூக்கம் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

News August 8, 2024

2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை அதிகரிப்பு

image

இந்தியாவில் 2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94% என இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 30 நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 54% முதல் 94% வரை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!