News August 25, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
▶பொருள்: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
Similar News
News July 8, 2025
யாரும் நெருங்க முடியாத கங்குலியின் ரெக்கார்ட்!

இன்று ‘தாதா’ <<16986348>>கங்குலியின் <<>>பிறந்தநாள். ODI-ல் தொடர்ந்து 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கிய ஒரே வீரர் செளரவ் கங்குலி தான். 1997-ல் சகாரா கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக வரிசையாக 4 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை பெற்றார் கங்குலி. இந்த ரெக்கார்டை இன்று வரையிலும் யாராலும் வீழ்த்த முடியவில்லை. இது மட்டுமின்றி, ODI-ல் 11,363 ரன்களை குவித்து அதிக ரன்களை அடித்த 2-வது இந்தியரும் ‘தாதா’ தான்.
News July 8, 2025
வேன் விபத்தில் அக்கா – தம்பி உயிரிழந்த சோகம்

கடலூர், செம்மங்குப்பத்தில் <<16987835>>ரயில்<<>> மோதி பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் சாருமதி (15), செழியன் (14) & விமலேஷ் (10) ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் சாருமதி & செழியன் ஆகிய இருவரும் அக்கா – தம்பி என்பது சோகத்தின் உச்சம். இரு குழந்தைகளையும் இழந்த அவர்களது பெற்றோர் ஹாஸ்பிடலில் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. மேலும், விஷ்வேஸ் மற்றும் டிரைவர் சங்கர் சிகிச்சையில் உள்ளனர்.
News July 8, 2025
கடலூர் துயரம்: அன்புமணி, டிடிவி, அண்ணாமலை இரங்கல்

கடலூரில் <<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த துயர சம்பவத்திற்கு அன்புமணி, அண்ணாமலை, டிடிவி, வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமிழ் தெரியாதவர்களை தமிழ்நாட்டில் கேட் கீப்பராக நியமிக்கக் கூடாது என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.