news

News November 1, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000 கிடைக்குமா? வந்தது அப்டேட்

image

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக காட்டுத்தீ போல் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்த உணவு பொருள் வழங்கல் (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள், இந்த தகவல் வெறும் வதந்தியே எனத் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசித்து CM ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

News November 1, 2025

WC ஃபைனல்: இன்னும் தொடங்காத டிக்கெட் விற்பனை

image

மகளிர் ODI உலகக்கோப்பை ஃபைனல் நாளை நடைபெற உள்ள நிலையில், BookMyShow-ல் இன்னும் டிக்கெட் விற்பனை தொடங்காதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மோசமான திட்டமிடல் என BCCI-ஐ குறிப்பிட்டு ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா மோத உள்ளன. முன்னதாக, கடந்த 2023 ஆண்கள் ODI உலகக்கோப்பையின் போதும், கடைசி நிமிடத்தில் தான் டிக்கெட் விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

டெலிபாத், டெலிபோர்ட் இனி Fantasy அல்ல…

image

டெலிபாத், டெலிபோர்ட், ஆயுளை நீட்டிக்கும் தொழில்நுட்பம் என பல எதிர்கால டெக்னாலஜிகளை நாம் ஆங்கில படங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதெல்லாம் சீக்கிரம் நிஜமாகப்போகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய சகாப்தத்தை நோக்கி அனைவரும் செல்ல உள்ள நிலையில், அந்த டெக்னாலஜிகள் பற்றி அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க..

News November 1, 2025

BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

image

கரூர் துயர சம்பவத்தையொட்டி தவெகவில் தொண்டர் அணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து 468 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாளை(நவ.2) பனையூர் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விஜய் மீண்டும் பரப்புரையை தொடங்குவது குறித்து விவாதிக்கப்படலாம்.

News November 1, 2025

உலகக்கோப்பையை வென்றால் இந்திய மகளிருக்கு ₹125 கோடி

image

நாளை நடைபெற உள்ள மகளிர் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதில், இந்தியா கோப்பையை கைப்பற்றினால், ₹125 கோடி பரிசுத் தொகை வழங்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஆண்கள் டி20 உலக்கோப்பையில் வென்ற பின், இந்திய அணிக்கு ₹125 கோடி பரிசு வழங்கப்பட்டது. அந்த வகையில் சமமான பரிசுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News November 1, 2025

அதிமுக மா.செ., கூட்டம் அறிவிப்பு

image

நவ.5-ம் தேதி அதிமுக மா.செ., கூட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்து மா.செ.,க்களும் தவறாமல் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர் செங்கோட்டையன் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News November 1, 2025

ரவிவர்மன் ஓவியமே ஐஸ்வர்யா ராய்

image

அழகின் உருவமான ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். உலக அழகி பட்டம் வென்ற நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யாவின் கண்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. 50 வயதை கடந்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரது சமீபத்திய போட்டோஸ், ரசிகர்களை மெய்மறக்க செய்கிறது. உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

News November 1, 2025

பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தம் ❤️❤️PHOTO

image

அல்லு அர்ஜுனின் தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ், நீண்ட கால காதலி நைனிகாவை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில், சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், குடும்பத்தினர் மத்தியில் மோதிரம் மாற்றிக் கொண்ட போட்டோக்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. தமிழில் கவுரவம் படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு சிரிஷ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

News November 1, 2025

தெருநாய்கள் விவகாரம்: தமிழக அரசு பதில் மனு

image

தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதில், TN-ல் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, மாநகராட்சிகளில் மட்டும் 91 கருத்தடை மையங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

News November 1, 2025

அதிக கிரிமினல் வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள்

image

பிஹார் தேர்தலுக்காக பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கொலை உள்பட அதிக குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளராக RJD வேட்பாளர் ரித்லால் ராய் (30 வழக்குகள்) உள்ளார். அவருக்கு அடுத்ததாக, JD (United) வேட்பாளர் ஆனந்த் சிங்கிற்கு எதிராக 28 கிரிமினல் வழக்குகளும், RJD வேட்பாளர் கரன்வீர் சிங்கிற்கு எதிராக 15 கிரிமினல் வழக்குகளும் உள்ளது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!