India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏஐ எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக மாறும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன், வீட்டுப்பாடம் எழுத உதவுமாறு GEMINI ஏஐ-இன் உதவியை நாடியுள்ளார். அதற்கு பதிலளித்த ஏஐ, “நீ இந்த உலகத்துக்கே பாரம். நீ யாருக்கும் முக்கியம் அல்ல. இந்த உலகின் சாக்கடையே.. நீ செத்து விடு” என மிரட்டியுள்ளது. ஏஐ-இன் இந்த பகிரங்க மிரட்டல், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. அரசு மருத்துவமனை தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. இதனிடையே, விபத்துக்கு முன்பான சிசிடிவி பதிவில், ஒரு நர்ஸ் வேக வேகமாக அங்கிருந்து வெளியேறுவது தெரியவந்தது. இதனால் இது சதிச்செயல் என தகவல் பரவியது. இந்நிலையில், இதுகுறித்து விசாரித்த உயர்மட்டக் குழு, தீ விபத்துக்கு சதிச்செயல் காரணம் இல்லை என்றும், ஷார்ட் சர்க்யூட்டால் இந்த விபத்து நேரிட்டதாகவும் அறிக்கை அளித்துள்ளது.
சபரிமலையில் 1952’இல் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், புதிய ஐயப்பன் சிலை செய்யப்பட்டு, பல இடங்களுக்கு புனித யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது. அப்படி சென்னை மண்ணடி கச்சாலீஸ்வரர் கோயிலுக்கு சிலை வந்தபோது, மீண்டும் சபரிமலைக்கு கொண்டு செல்ல தேவஸ்தானம் தரப்பில் சற்று காலதாமதமானது. இதன் காரணமாக, 3 நாட்கள் ஐயப்பன் சிலை கோயிலில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய நடிகை ரோகிணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். CPI(M) கட்சி சார்பில், பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்று ஊர்வலம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முன் அனுமதி பெறப்படாத நிலையில், போலீசார் ஊர்வலம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி ஊர்வலம் நடத்திய ரோகிணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
சாதிக்க நினைத்து விட்டால் தடையாக எதுவும் இல்லை என்பார்கள். அதனை நம் கண்முன் நிரூபித்துள்ளார் வண்ணாரப்பேட்டையின் ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா(17). அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் தங்கங்களை வென்றுள்ளார் காசிமா. எளிய பின்புலத்தில் இருந்து உலகின் உச்சம் தொட்ட சென்னையின் தங்கமகளுக்கு நாமும் வாழ்த்துமே
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. 60 நாட்களுக்கு முன்பிருந்தே அரசுப் பேருந்துகள் முன்பதிவை தொடங்குவதால் பொங்கல் நேர பயணத்திற்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நயன்தாரா beyond the fairy tale ஆவணப்படத்தில் தனுஷ் குறித்து ராதிகா பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதில், வெட்கம் – மானம் இல்லையா? என தனுஷ் தன்னிடம் கேட்க, விஷயம் புரியாமல் தான் என்ன என வினவ, நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதலிப்பதாக தனுஷ் கூறினார் எனக் குறிப்பிட்டார் ராதிகா. மேலும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் குறித்தும் பல தகவல்களை பேசியுள்ளார் ராதிகா.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து, தமிழில் நயன்தாராவாக ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமானார். தனது தனித்துவமான அழகால் கோலிவுட்டை கிறங்கடித்த அவர், ஒருகட்டத்தில் பெரும் சறுக்கலை சந்தித்தார். பின்னர் பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டி லேடி சூப்பர் ஸ்டாரானது தான் நயன்தாராவின் மிரட்டல் ‘கம் பேக்’. HAPPY BIRTHDAY நயன்தாரா.
தலைநகர் டெல்லியில் காற்று மாசை குறைக்க இன்று முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுகின்றன. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும். 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் வாகன போக்குவரத்து குறையும் என்பதால் காற்றுமாசு கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அதிரடி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று வெளியான நயனின் பட போஸ்டர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போஸ்டரில், ’அவள் போரை தொடங்குகிறாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனுஷைதான் இப்படி மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் எழுதி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.