News November 18, 2024
நடிகை ரோகிணி மீது வழக்குப்பதிவு

சென்னையில் தடையை மீறி ஊர்வலம் நடத்திய நடிகை ரோகிணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். CPI(M) கட்சி சார்பில், பாலின பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்று ஊர்வலம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முன் அனுமதி பெறப்படாத நிலையில், போலீசார் ஊர்வலம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தினர். அதனையும் மீறி ஊர்வலம் நடத்திய ரோகிணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
சற்றுமுன்: விடுமுறை.. தமிழக அரசு HAPPY NEWS

வார விடுமுறையையொட்டி டிச.12 – 14 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். எனவே, ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், உடனடியாக இங்கே <
News December 10, 2025
TN-ல் வாக்குச்சாவடிகள் 75,035 ஆக உயர்வு

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே TN-ல் 68,467 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் SIR பணிகளின் ஒரு பகுதியாக, கூடுதலாக 6,568 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 2,509 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் TN தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
News December 10, 2025
‘கைதி 2’ டிராப் ஆனதா?

LCU யுனிவர்ஸில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த படம் ‘கைதி 2’. கூலி-க்கு பிறகு ‘கைதி 2’ பணிகளை லோகேஷ் தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர், டோலிவுட் பக்கம் கவனத்தை திருப்பி அல்லு அர்ஜுன், பிரபாஸிடம் கதை சொல்லியுள்ளார். இந்நிலையில் கார்த்தியிடம் ‘கைதி 2’ அப்டேட் கேட்கப்பட்டது. அவரோ, அதைப்பற்றி தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என கூறியுள்ளார். இதனால் படம் டிராப் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.


