India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை NTA வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நெட் தேர்வில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் மறு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒருநாள் முன்னதாகவே ரிசல்ட் வெளியாகியுள்ளது. ugcnet.nta.ac.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
அன்புடன் முத்தமிடும் போது oxytocin, dopamine மற்றும் serotonin ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தி உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. மனம் ரிலாக்ஸாகிறது. காதலர்கள், தம்பதியர் முத்தமிடும் போது, பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதனால் தாம்பத்ய இன்பம் அதிகரிப்பதுடன், காதலும் பிணைப்பும் வலுப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
பச்சரிசி (1 கப்), உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு (தலா 1/4 கப்) ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதை நீரூற்றாமல் சிறிது சிறிதாக ஏலக்காய், தேங்காய் துருவல் தூவி, முந்திரி, வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ளவும். இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்கி விடவும். இந்த கலவையை சூடான பணியாரக் கல்லில் ஊற்றவும். அவை பொன்னிறமாக மாறும்வரை சுட்டு எடுத்தால், சுவையான உண்ணியப்பம் ரெடி.
ஆன்லைன் ரயில் முன்பதிவு காலத்தை 120இல் இருந்து 60 நாள்களாக குறைத்த முடிவு IRCTC பங்குகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பங்குகள் விலை இன்று ₹21.70 குறைந்து ₹870-ல் முடிவடைந்தது. IRCTCயின் வாழ்நாள் உச்சத்தில் 25%ஐ இழந்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு காரணம் IRCTCயின் 80-85% வருமானம் ஆன்லைன் முன்பதிவால் கிடைப்பதே. இந்த திடீர் மாற்றத்தால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
NZ-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததுதான் தவறு என ரோஹித் ஷர்மா ஒப்புக் கொண்டுள்ளார். மைதானத்தை முழுமையாக ஆராயாமல், தான் தப்புக்கணக்கு போட்டு விட்டதாகவும், 46 ரன்களில் மடிந்தது தன்னைக் காயப்படுத்தியதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், சில நேரங்களில் திட்டமிட்டபடி செயல்பட முடியாமல் போகும். அதுபோன்று இன்றைய நாள் மோசமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் அதிமுக நிர்வாகியிடம் HC சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ADMK MLAக்கள் 40 பேர் திமுகவுக்கு வர இருந்ததாக அப்பாவு கூறிய நிலையில், அதை எதிர்த்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இதை ரத்து செய்யக்கோரி அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த பேச்சு எப்படி அவதூறில் வரும் என்று அதிமுக நிர்வாகியிடம் HC கேள்வி எழுப்பியுள்ளது.
விஜய் கட்சியில் சேரவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார். அண்மையில் புஸ்ஸி ஆனந்தை அவர் சந்தித்த வீடியோ வைரலானது. இதையடுத்து, அவர் தவெகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதனை தாடி பாலாஜி மறுத்துள்ளார். “புஸ்ஸி ஆனந்த் கூப்பிட்டாரு. போனேன். மாநாட்டுக்கு நீங்க ஒர்க் பண்ணனும்னு விஜய் சொன்னதா சொன்னாரு. பண்ண ஆரம்பிச்சிட்டேன். மத்தபடி, கட்சியிலெல்லாம் சேரலைங்க” என்றார்.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 40 ODI போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சிஎஸ்கே அணிக்காகவும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். முன்னாள் தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி 3 முறை கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்துள்ளார்.
பிரீமியம் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பயனர்களும் பயன்பெறும் வகையில் 3 புதிய அம்சங்களை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. 1.வீடியோக்களின் வேகத்தை 0.05 புள்ளிகள் குறைக்கும் அம்சம். 2.குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாகவே APP-ல் இருந்து வெளியேறி ஸ்கிரீன் ஆஃப் ஆகும் ஸ்லீப்பர் டைம் வசதி. 3.IOS தளங்களில் வீடியோவை Full Screen-ல் பார்க்கும் போது Browsing செய்யும் அம்சம்.
Sorry, no posts matched your criteria.