News November 19, 2024

நடிகை மூன் மூன் சென் கணவர் காலமானார்!

image

பெங்கால் திரையுலகில் பிரபலமான நடிகை மூன் மூன் சென்னின் கணவர் பாரத் தேவ் வர்மா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது(83). நடிகை மூன் மூன் சென் வீட்டிற்கு நேரில் சென்ற மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரத் தேவ் வர்மாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மறைந்த பாரத் தேவ் வர்மாவுக்கு ரைமா, ரியா சென் என்ற இரு மகள்கள் உள்ளனர்.

Similar News

News December 10, 2025

விஜய் ஹசாரே டிராபி: TN அணிக்கு ஜெகதீசன் கேப்டன்

image

டிச.24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே டிராபிக்கான (VHT) தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீசன் தலைமையிலான அணியில் சாய் சுதர்சன், இந்திரஜித், சோனு யாதவ், சன்னி சந்து, சாய் கிஷோர், முகமது அலி உள்ளிட்ட 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். VHT-ல், 5 முறை சாம்பியனான TN அணி, கடந்த 2 முறை ஃபைனலுக்கு முன்னேறவில்லை. எனவே, இம்முறை சிறப்பாக விளையாடி மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் தமிழக வீரர்கள் உள்ளனர்.

News December 10, 2025

இரவில் ஆண்கள் கூகுளில் அதிகம் பார்ப்பது இதுதான்

image

இணையத்தில் ஏதாவதொன்றை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கும் தலைமுறையில் தான் நாம் உள்ளோம். இந்த தேடல் இரவிலும் நம்மை விடுவதில்லை. குறிப்பாக, ஆண்கள் இரவில் நல்ல இசை & சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். ஒரு பெண்ணை எப்படி இம்ப்ரஸ் செய்வது, மனைவியுடன் எவ்வாறு இணக்கமாக செல்வது போன்ற உறவு மேம்பாடு பற்றி தேடுகிறார்களாம். இதுதவிர ஹெல்த் டிப்ஸை கூகுளிடம் கேட்கிறார்களாம். நீங்க என்ன தேடுவீங்க?

News December 10, 2025

தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமனம்

image

தமிழகத்தின் புதிய டிஜிபியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் உள்ள டிஜிபி வெங்கட்ராமன், 15 நாள்களுக்கு மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். இதையடுத்து, அவர் பொறுப்பு டிஜிபி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரான அபய்குமார் சிங் IPS-ற்கு கூடுதல் பொறுப்பாக டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!