News November 19, 2024
BGT தொடர் உருவான வரலாறு தெரியுமா?

1996-ல் INDவில் சுற்றுப்பயணம் செய்த AUS அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது இருநாட்டு கிரிக்கெட்டிற்கு பங்காற்றிய ஆலன் பார்டர் மற்றும் சுனில் கவாஸ்கரை கவுரவிக்கும் வகையில் தொடரை அவர்களின் பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நாளடைவில் இது ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ எனப் பெயரிடப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 16 தொடர்கள் நடைபெற்ற நிலையில், IND அணி 10 முறை வென்றுள்ளது.
Similar News
News December 11, 2025
சற்றுமுன் EPS-ஐ சந்தித்தார் நயினார் நாகேந்திரன்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் EPS-ஐ சந்தித்து நயினார் பேசி வருகிறார். வரும் 14-ம் தேதி அவர் டெல்லி செல்லவிருக்கும் நிலையில், EPS உடனான ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி முடிவுகளை எடுக்க EPS-க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
News December 11, 2025
காற்று மாசை காலிசெய்யும் Go Green Filter: யூத்ஸின் ஐடியா!

உலகின் கொடிய வில்லனாக காற்று மாசு மாறியுள்ளது. இதில் பெரிய பங்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைக்குதான். இந்த புகையை ஆக்ஸிஜனாக மாற்றலாமா என யோசித்த USA-வை சேர்ந்த ரோஹன் கபூர் & ஜாக் ரீச்செர்ட் இன்று உலகின் கவனத்தை பெற்றுள்ளனர். இவர்கள் உருவாக்கிய ‘Go Green Filter’ வாகனங்களின் புகையை 74% குறைக்கிறதாம். இது இந்தோனேஷியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நம் ஊருக்கும் தேவை அல்லவா?
News December 11, 2025
டெல்லி செல்கிறார் நயினார்

டிச.14-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைப்பதற்காக அண்ணாமலை டெல்லிக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், நயினாரும் அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது, கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.


