news

News November 9, 2024

ஒரே ஆளாக 426* ரன்கள் குவிப்பு

image

ஹரியானா வீரர் யஷ்வர்தன் தலால் உள்நாட்டுப் போட்டியில் புதிய வரலாறு ஒன்றை படைத்தார். மும்பைக்கு எதிரான சிகே நாயுடு டிராபி போட்டியில், அவர் 463 பந்துகளில் 46 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 426* ரன்கள் குவித்தார். அவரின் அதிரடி ஆட்டத்தால், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஹரியானா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 732 ரன்கள் எடுத்துள்ளது. இவரை இந்தியாவின் வருங்காலம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

News November 9, 2024

NZ 135 ரன்களுக்கு ஆல் அவுட்

image

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசி., அணி 19.3 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 27, ஃபௌல்க்ஸ் 27 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இலங்கை அணியில் Dunith Wellalage 3, பத்திரனா, ஹசரங்கா, நுவன் துஷாரா தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.

News November 9, 2024

வசூல் மன்னனாக மாறிய SK

image

எஸ்கே, சாய் பல்லவி நடிப்பில் வெற்றிகரமாக ஓட்டிக் கொண்டிருக்கும் திரைப்படம் “அமரன்”. படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அப்படி இருந்தும் இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எஸ்கே நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை அமரன் பெற்றுள்ளது.

News November 9, 2024

மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பெண்களிடம் கூறுங்க: முதல்வர்

image

ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து, மகளிர் உரிமைத் திட்டம், இலவச பஸ், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று கட்சியினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இளைஞர்கள், மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் போல, சட்டமன்றத் தேர்தலிலும் 100% வெற்றியைப் பெற்று ஆட்சியமைப்போம் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

News November 9, 2024

‘டிராகன்’ இணைந்த 3 இயக்குநர்கள்

image

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டிராகன்’. இப்படத்தில் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் புதிதாக இணைந்துள்ளனர். இதில், மிஸ்கின் வில்லனாகவும், கௌதம் போலீசாகவும், கே.எஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, விஜே சித்து, அர்ஷத் கான் இணைந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News November 9, 2024

மரத்தில் அமர்ந்து மேட்ச் பார்க்கும் இலங்கை ரசிகர்கள்

image

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசி., அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 10 ஓவரில் 60/5 ரன்கள் மட்டுமே எடுத்து, தடுமாறி வருகிறது. இப்போட்டியை காண இலங்கை ரசிகர்கள் ஆர்வத்துடன் மைதானத்தில் குவித்துள்ளனர். இதில், சில ரசிகர்கள் மரத்தில் அமர்ந்து, போட்டியை கண்டு ஆரவாரம் செய்து வருகின்றனர்.

News November 9, 2024

புதிதாக வரும் பாலியல் அமைச்சகம்..!

image

இந்தியாவை விட 5 மடங்கு பெரிய நாடான ரஷ்யாவில் வெறும் 14 கோடி தான் மக்கள்தொகை. இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பாலியல் அமைச்சகத்தை (Sex Ministry) கொண்டு வர ரஷ்ய அரசு பரிசீலிக்கிறது. கணவன் – மனைவி இடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக இரவு 10 மணி முதல் 2 மணி வரை இன்டர்நெட் சேவையை ரத்து செய்யவும், ஆண் – பெண் DATING-க்கு பணம் வழங்கவும் அரசு பரிசீலிப்பதாக தெரிகிறது.

News November 9, 2024

சாதி பெயரை தூக்கிய நித்யா மெனென்

image

திரைபிரபலங்கள் பலரும் தங்களின் பெயருடன் சாதி அடையாளத்தையும் போடுவது வழக்கம். ஆனால், முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் பலர் சாதி பெயரை பயன்படுத்துவதில்லை. தற்போது அப்படி தான் நடிகை நித்யா மேனன் (menon) என இருந்த தன்னுடைய பெயரை நித்யா மெனென் (menen) என மாற்றியுள்ளார். இனி நித்யா மேனன் என யார் அழைத்தாலும், அது spelling mistake. அது என்னுடைய பெயர் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

News November 9, 2024

BREAKING: தமிழ்நாட்டில் நிலநடுக்கம்

image

தமிழ்நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் மதியம் 1.30 மணியளவில் பூமியின் 5 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு, வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

News November 9, 2024

அடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா

image

விஜய் – சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர். தவெக மாநாட்டில் தமிழ் தேசியமும், திராவிடமும் இரு கண்கள் எனக் கூறியதால், விஜய்யை சீமான் தொடர்ந்து அட்டாக் செய்தார். இதனால், இரு கட்சியினருக்கும் சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் வெடித்தது. இந்நிலையில், அன்பு சகோதரர் எனக் குறிப்பிட்டு பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்க்கு, தம்பி எனக் குறிப்பிட்டு சீமான் நன்றி கூறியுள்ளார்.

error: Content is protected !!