News November 9, 2024
வசூல் மன்னனாக மாறிய SK

எஸ்கே, சாய் பல்லவி நடிப்பில் வெற்றிகரமாக ஓட்டிக் கொண்டிருக்கும் திரைப்படம் “அமரன்”. படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக கூறி கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அப்படி இருந்தும் இப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எஸ்கே நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை அமரன் பெற்றுள்ளது.
Similar News
News November 10, 2025
தென்காசி மக்களை உடனே CHECK பண்ணுங்க!

தென்காசி மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 10, 2025
‘அரசன்’ படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன வெற்றிமாறன்!

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ப்ரோமோவின் ஷூட்டிங் 2 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து படத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இச்சூழலில்தான், ‘மாஸ்க்’ படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறன், படத்தின் ஷூட்டிங் வரும் 24-ம் தேதி தொடங்கும் என கூறியிருக்கிறார்.
News November 10, 2025
30% வாக்காளர்களை காணோம்: கடம்பூர் ராஜூ

தனது கோவில்பட்டி தொகுதியிலேயே 30% வாக்காளர்களை காணோம் என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு என்பது திமுகவுக்கு கை வந்த கலை. இரட்டைபதிவு, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது என 30% பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்; ஆனால், ஆள் இருக்க மாட்டார்கள். வாக்குப்பதிவு அன்று மட்டும் வந்து அந்த வாக்குகள் விழும் என்று சாடினார்.


