News November 9, 2024
ஒரே ஆளாக 426* ரன்கள் குவிப்பு

ஹரியானா வீரர் யஷ்வர்தன் தலால் உள்நாட்டுப் போட்டியில் புதிய வரலாறு ஒன்றை படைத்தார். மும்பைக்கு எதிரான சிகே நாயுடு டிராபி போட்டியில், அவர் 463 பந்துகளில் 46 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 426* ரன்கள் குவித்தார். அவரின் அதிரடி ஆட்டத்தால், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஹரியானா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 732 ரன்கள் எடுத்துள்ளது. இவரை இந்தியாவின் வருங்காலம் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
ஏன் இவ்வளவு தாமதம்? அரசுக்கு EPS கேள்வி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு உண்டான ஜிஎஸ்டி நிதியை விடுவிப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், MLA தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற பணிகளுக்கு உண்டான நிதியை மாவட்ட ஆட்சியர்கள் விடுவிக்காமல் சிரமப்படுகின்றதாகவும் கூறியுள்ளார். எனவே உடனடியாக அந்த நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 8, 2025
ராசி பலன்கள் (08.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 8, 2025
VIRAL PHOTO: காதலை உறுதிப்படுத்திய சமந்தா

சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரும் காதலித்து வருவதாக நீண்ட நாள்களாக ஒரு வதந்தி வலம் வருகிறது. ஆனால் இதுவரை இருவரும் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தனது புதிய perfume brand அறிமுக நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார். ராஜை கட்டியணைத்தபடி உள்ள அந்த போட்டோ வைரலான நிலையில், காதலை சமந்தா உறுதிப்படுத்திவிட்டதாக பார்க்கப்படுகிறது.


