India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போலி பான் கார்டுகள் மூலமாக பண மோசடி நடப்பதை தடுக்க, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல முறை இதற்கு அவகாசம் கொடுத்தும் கூட, இன்னும் பலர் இதை செய்யவில்லை. இந்நிலையில், வரும் டிச.31 இதற்கான கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலும் இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்தாகி விடும். அதை புதுப்பிப்பதும் கடினமான நடைமுறை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனது ஒப்பற்ற திறமையால் எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர் டெல்லி கணேஷ். அவரது மறைவு நிரப்ப முடியாத கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும்போது அரசியல் சூழலை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும் என்று இன்று பதிலளித்தார் இபிஎஸ். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. விஜய்யால் அரசியல் களம் மாறியுள்ள நிலையில், திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைப்பேன் என்பதையே இபிஎஸ் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். அடித்து ஆடத் தொடங்கிவிட்டாரா இபிஎஸ்?
தினசரி காலையில் வழக்கமாக எழும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்திருப்பது மனச்சோர்வை 23% குறைப்பதாக அமெரிக்க, பிரிட்டன் பல்கலை. கள் நடத்திய ஆய்வில் உறுதியாகியுள்ளது. இரவில் நீண்டநேரம் விழித்திருப்பது சிலருக்கு மரபியல் ரீதியான காரணமாக இருந்தாலும், பெரும்பாலானோர் அதன் பாதிப்பை உணராமலேயே அப்படி செய்கின்றனராம். ஆகவே மக்களே, நாளை முதல் ஒரு மணிநேரம் முன்னதாகவே எழுந்திருக்க முயற்சிக்கலாமே!
முதல்வர் தனது மகன் உதயநிதியை பற்றியே அதிகம் கவலை கொள்வதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். உதயநிதி அமைச்சர் பணியில் சிறப்பாக செயல்பட்டு 100 மதிப்பெண் பெற்றுள்ளதாக முதல்வர் பெருமைப்படுவதாக குறிப்பிட்ட அவர், மற்ற அமைச்சர்கள் அனைவரும் பெயில் ஆகிவிட்டார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சில நாள்கள் முன்பு பேசிய முதல்வர், உதயநிதி, அமைச்சர் பணியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறியிருந்தார்.
வாரம் ஒருமுறை, உங்கள் செல்போனை ஸ்விட்ச்-ஆப் செய்வது பல்வேறு நன்மைகளை தரும் என்கின்றனர் tech experts. ஆம், வாரம் ஒருமுறை, சில நிமிடங்கள் உங்கள் போனை ஆப் செய்து வைத்தால்: *போன் ஹேக் செய்யப்படுவதை, தகவல்கள் திருடப்படுவதையும் தடுக்க உதவும். *பேட்டரி ஆயுள் கூடும் *மெமரி லீக் கட்டுப்படும் *கனெக்டிவிடி பிரச்சனைகள் சீராகும் *கேஷ் மெமரி அழிவதால் ஸ்பீட் அதிகரிக்கும் *சில நிமிடங்கள் மனநிம்மதி கிடைக்கும்.
கட்சி நிர்வாகிகள் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். கட்சியின் பொதுக்கூட்டங்கள், மாநாட்டுக்கு வரும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் காரில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து வரும் வேன்கள் அல்லது பேருந்துகளில் அவர்களுடன் இணைந்து வர வேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்.
மச்சம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். திடீரென மச்சம் வந்தால் அதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அதே சமயம், எல்லா மச்சங்களையும் அப்படி அணுகக் கூடாது என சருமநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு மச்சம் திடீரென அளவில் பெரியதாகிக் கொண்டே போனாலோ, அதிலிருந்து நீர்க்கசிவு போன்ற ஏதேனும் இருந்தாலோ அல்லது புண்ணாகிப் போனாலோ அது குறித்து கவனித்து உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்கின்றனர்.
மக்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிகள் இபிஎஸ்-ஐ தேடி வருவார்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 3 வருட திமுக ஆட்சியில், தமிழகம் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். கூட்டணியை பற்றி நிர்வாகிகள் கவலை கொள்ள தேவையில்லை என்றும், வெற்றி கூட்டணியை இபிஎஸ் அமைப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சனியும் சுக்கிரனும் இந்தாண்டு இறுதியில் கும்பத்தில் சேர்வதால் பலன் பெறும் நட்சத்திரங்கள் • அஸ்வினி: அதிர்ஷ்டம், வெற்றி தேடி வரும். பதவி உயர்வு உண்டு. • ரோகிணி: திருமண தடங்கல் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி. • உத்திரம்: நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சி கொட்டும். • சித்திரை: புதிய தொழில் தொடங்கும் நேரம். சாதனை செய்வீர்கள். • உத்திராடம்: எல்லா முயற்சியும் வெற்றியடையும். தொட்டதெல்லாம் துலங்கும்.
Sorry, no posts matched your criteria.