News November 10, 2024

திடீரென தோன்றும் மச்சம்… கவனம் அவசியம்!

image

மச்சம் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். திடீரென மச்சம் வந்தால் அதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. அதே சமயம், எல்லா மச்சங்களையும் அப்படி அணுகக் கூடாது என சருமநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு மச்சம் திடீரென அளவில் பெரியதாகிக் கொண்டே போனாலோ, அதிலிருந்து நீர்க்கசிவு போன்ற ஏதேனும் இருந்தாலோ அல்லது புண்ணாகிப் போனாலோ அது குறித்து கவனித்து உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்கின்றனர்.

Similar News

News November 7, 2025

கார்த்திகாவுக்கு ₹1 லட்சம் வழங்கிய லோகேஷ் கனகராஜ்

image

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா தங்க பதக்கம் வென்றார். எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்த அவருக்கு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கினார்.

News November 7, 2025

பாக். தளபதிக்கு அதிக அதிகாரம்

image

பாகிஸ்தானை ஆள்வது PM ஷெபாஸ் ஷெரீப் அல்ல, ராணுவ தளபதி அசிம் முனீர் தான் என்று எதிர்கட்சித் தலைவர் இம்ரான்கான் நேற்று குற்றம்சாட்டினார். இதை உறுதிப்படுத்தும் விதமாக தளபதி முனீருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய ஆளுங்கட்சித் தயாராகி வருகிறது. ஏற்கெனவே அரசியலில் ராணுவ தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்த திருத்தத்தால் ராணுவத்தின் கை மேலும் ஓங்கும்.

News November 7, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

error: Content is protected !!