News November 10, 2024
நல்லவர்கள் அதிமுகவோடு வருவார்கள்: வேலுமணி

மக்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிகள் இபிஎஸ்-ஐ தேடி வருவார்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 3 வருட திமுக ஆட்சியில், தமிழகம் அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். கூட்டணியை பற்றி நிர்வாகிகள் கவலை கொள்ள தேவையில்லை என்றும், வெற்றி கூட்டணியை இபிஎஸ் அமைப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News November 14, 2025
பிஹார் வெற்றி WB-லிலும் தொடரும்: கிரிராஜ் சிங்

பிஹாரில் NDA கூட்டணி 191 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவுக்கே உரியது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். இந்த வெற்றி, தற்போது அராஜக ஆட்சி நடைபெறும் மே.வங்கத்திலும் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். CM மம்தா பானர்ஜி தலைமையிலான TMC ஆட்சி நடைபெறும் அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
News November 14, 2025
நீரிழிவு நோயை உண்டாக்கும் 7 பழக்கங்கள்!

இந்த பழக்கங்களின் மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் ✦காலை நேர உணவை தவிர்ப்பது ✦ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது ✦குறைவான நேரம் தூங்குவது அல்லது முறையாக தூங்கும் பழக்கம் இல்லாதது ✦அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வது ✦அதிக சர்க்கரையுள்ள பானங்கள் பருகுவது ✦உடல்பயிற்சியின்மை ✦அதிக மன அழுத்தம். இப்பதிவை அதிகளவில் பகிரவும்.
News November 14, 2025
கண்ணீருடன் உதயநிதி நேரில் அஞ்சலி

உதயநிதியின் நண்பரும், அவரின் டிரைவருமான பாலாவின் தந்தை ரவி, உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு வேதனையடைந்த உதயநிதி, முதல் ஆளாக ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்று, ரவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது, ரவியின் உடலை பார்த்ததும் அவர் கண்கலங்கி அழுதார். தற்போது திமுக முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


