India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போதைய வாழ்க்கை முறையில், குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக விந்தணு எண்ணிக்கை குறைபாடு அதிகரித்து வருகிறது. சில உணவு வகைகளை தவிர்த்தாலே, இந்த பாதிப்பை குறைக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள். அவை என்னென்னவென்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 9 முதல் 13-ம் தேதி வரை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரப்படி, காலண்டரை எந்த திசையில் வைக்கிறோம் என்பது நம் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். *கிழக்கு: வளர்ச்சி, புதுப்பித்தலை குறிக்கிறது. இலக்குகளை அடைய ஊக்கமளிக்கும். *வடக்கு: தொழில் வளர்ச்சி, நிதிநிலை மேம்படும். *வடகிழக்கு: ஆன்மிக வளர்ச்சி, சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது. *தென்மேற்கு: உறவுகள் வலுப்படும், அன்பு பெருகும். *மேற்கு: படைப்பாற்றல் அதிகரித்து, புதிய யோசனைகளை பெற உதவும்.

SA U19 அணிக்கு எதிரான முதல் ODI போட்டியில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND, 301 ரன்களை எடுத்தது. அதையடுத்து SA பேட்டிங் செய்தபோது, 27.4-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு DLS முறைப்படி 174 ரன்கள் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், SA அணி 148 ரன்களை மட்டுமே எடுத்து, தோல்வியை தழுவியது.

பொங்கல் பரிசுக்கு பணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என <<18752898>>அமைச்சர் பெரியகருப்பன்<<>> தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதற்கான டோக்கன்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 நாள்களுக்குள் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஜன.8-ல் பொங்கல் தொகுப்பு திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. SHARE IT.

வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டதாக டிரம்ப் அறிவித்ததன் மூலம், மதுரோவின் பெயர் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிக்கோலஸ் மதுரோ, பஸ் டிரைவராக தனது வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் அதிபராக உயர்ந்தவர். அரசியலில், ஹியூகோ சாவேஸின் சீடராக இருந்த மதுரோ, அவரது மரணத்திற்குப் பின், 2013-ல் நாட்டின் அதிபரானார். அவர்மீது, பொருளாதார நிர்வாகச் சீர்கேடு மற்றும் மனித உரிமை மீறல்கள் உட்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்குவகித்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நியூசிலாந்து தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. காயங்களிலிருந்து மீண்டு, தனது உடற்தகுதியை நிரூபித்த பிறகும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால், வாய்ப்புக்காக காத்திருக்கும் ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை(ஜன.4) முதல் 2 நாள்களில் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 21 லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. வழக்கமாக, மாதத்தின் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பணிகள் நடைபெறும். பொங்கலையொட்டி இம்முறை முன்கூட்டியே பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

அரசியல் தலைவர்கள் பலரின் பெயர்களுக்கு முன் அவர்களது அடையாளமாக எழுத்துக்கள் உள்ளன. அந்த இனிஷியல்களுக்கு பின்னணியில் உள்ள வரலாறு உங்களுக்கு தெரியுமா? அந்த எழுத்துகளுக்கான விளக்கங்களை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். SHARE.

இந்த வார வர்த்தக முடிவில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹4,000 குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. கடந்த வாரம் (டிச.28) 22 கேரட் தங்கம் சவரன் ₹1,04,800-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹1,00,800- ஆக சரிந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் கிலோ வெள்ளி ₹28,000 சரிந்து ₹2.57 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.