news

News January 3, 2026

கையில் டிகிரி பாக்கெட்டில் RDX: ராஜ்நாத் சிங்

image

நாட்டில் White-Collar தீவிரவாதம் அதிகரித்து வருவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உதய்ப்பூர் பல்கலை.,யில் பேசிய அவர், டெல்லி கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் அனைவரும் டாக்டர்கள், அவர்கள் ஒரு கையில் டிகிரியையும் பாக்கெட்களில் RDX-ஐயும் வைத்திருந்ததாகவும் கூறினார். மேலும், கல்வியின் நோக்கம் வெறும் தொழில்முறை வெற்றி மட்டுமல்ல, ஒழுக்கம், அறநெறிகள், மனித குணங்களை வளர்ப்பதாகும் என்றார்.

News January 3, 2026

பிக்பாஸ் வீட்டில் ரெட் கார்டு.. ஜோடியாக வெளியேறினர்

image

பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றிலேயே முதன்முறையாக ரெட் கார்டு கொடுத்து ஆண், பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தமிழ் பிக்பாஸில் நடந்துள்ளது. ஃபைனலுக்குள் நுழைவதற்கான கார் டாஸ்க்கில் சாண்ட்ராவிடம், VJ பார்வதி, கமரூதின் ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர். இது சோஷியல் மீடியாவில் சர்ச்சையான நிலையில், இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து ஜோடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 3, 2026

டிகிரி மட்டும் போதாது.. இதையும் படிக்க வையுங்க..

image

முன்பெல்லாம் டிகிரி முடித்தாலே வேலை என்ற காலகட்டம் மாறி, தற்போது வேலை கிடைப்பதே கடினம் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் குழந்தைகளை எதை படிக்க வைப்பது என நீங்கள் குழம்ப வேண்டாம். உங்கள் குழந்தைகள் டிகிரி முடிப்பதோடு, AI சார்ந்த படிப்புகள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், Data Science, அடிப்படை கோடிங், Interior Design, சட்டம் என இதில் ஏதாவது ஒன்று கற்பது அவசியம் என கல்வியாளர்கள் சொல்கின்றனர். SHARE.

News January 3, 2026

இந்தாண்டு காதலில் ஜெயிக்கும் 5 ராசிகள்

image

2026-ல் ஜோதிடர்கள் கணிப்புப்படி, *மீனம்: காதல் கைகூடி வரும். பிப்., மார்ச்சில் திருமணம் நடக்க வாய்ப்பு. *துலாம்: கண்டிப்பாக வாழ்க்கைத் துணை கிடைக்கும். *ரிஷபம்: கிரக அமைப்புப்படி, ஏப்ரல், மே மாதங்களில் திருமண பந்தத்திற்குள் நுழைய வாய்ப்பு. *கடகம்: காதல் தோல்விக்கு பிறகு, இந்தாண்டு புதிய துணையை தேர்வு செய்வீர்கள். *மகரம்: நீண்ட காலம் காதலித்து வந்தவர்கள் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பார்கள்.

News January 3, 2026

2025-ல் இவ்வளவு உயிரிழப்புகளா?

image

இந்தியாவின் மோசமான காலநிலை 2025-ம் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னல், சூறாவளி, கனமழை, வெள்ளம், வெப்பம், நிலச்சரிவு மற்றும் குளிர் உள்ளிட்டவை காரணமாக, குறைந்தது 2,760 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, எந்தெந்த மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News January 3, 2026

அரசியல் Blast-ஆக வெளிவந்த ‘ஜனநாயகன்’ டிரெய்லர்

image

‘ஜனநாயகன்’ படத்தில் ‘தளபதி வெற்றிக் கொண்டான்’ என்ற கேரக்டரில் விஜய் நடித்துள்ளார். ‘உன்னால ஒண்ணும் பண்ண முடியாது விலகி போ’ என விஜய்யை பார்த்து கூறுவதும், ‘உன்ன காலி பண்ணிருவேன், அசிங்கப்படுத்திருவேன்னு சொல்ற எவனா இருந்தாலும் சரி, திரும்பிப் போற ஐடியாவே இல்ல’ என விஜய் சொல்வதும் அரசியல் Blast-ஆக உள்ளது. அதேபோல், அரசியல்வாதிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவதும் <<18753964>>டிரெய்லரில்<<>> காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

News January 3, 2026

அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

image

தமிழகத்தை அதிர வைத்த காவலாளி அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் சங்கர மணிகண்டன், டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட கோர்ட்டில் அணுகினர். அவர்களது மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

News January 3, 2026

யாருடன் கூட்டணி? தேமுதிகவின் கிளைமாக்ஸ்

image

தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கிளைமாக்ஸை வரும் 9-ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் வெளியிட உள்ளதாக விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவரிடம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை என சூசகமாக பதில் அளித்தார்.

News January 3, 2026

அழகம்மா அனுபமா பரமேஸ்வரன்

image

பாரம்பரியம் மற்றும் மார்டன் லுக் என இரண்டிலும் அழகாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அவரது போட்டோக்களை பார்த்து பூக்களின் வாசம் நீயோ, பூங்குயில் பாஷை நீயோ, பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த போட்டோக்கள் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News January 3, 2026

ஒரே நாளில் விலை ₹3,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

காலையில் குறைந்த <<18753027>>தங்கம்<<>>, வெள்ளி விலைகளில் மாலையில் சிறிது மாற்றம் ஏற்றப்பட்டுள்ளது. காலையில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹4,000 குறைந்திருந்தது. ஆனால், மாலையில் ₹1,000 உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இன்றைய தினம் வெள்ளி 1 கிலோ ₹3,000 குறைந்து, ₹2.57 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரம் மட்டும் வெள்ளி விலை ₹28,000 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!